ஆறு மாத மௌனத்துக்குப் பிறகு தந்தையை அழைத்த இளவரசர் ஹரி: மேகனும் பேசியதாக தகவல்...
ஆறு மாதங்களுக்கும் மேலாக தன் தந்தையாகிய மன்னர் சார்லசுடன் பேசாமலிருந்த இளவரசர் ஹரி, பிறந்தநாள் வாழ்த்துச் சொல்வதற்காக மன்னரை தொலைபேசியில் அழைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆறு மாத மௌனத்துக்குப் பிறகு தந்தையை அழைத்த ஹரி
இதற்கு முன், மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவுக்கு முன்னதாக, ஏப்ரல் மாதம்தான் மன்னர் சார்லசும் அவருடைய இளைய மகனான இளவரசர் ஹரியும் பேசிக்கொண்டார்கள்.
இந்நிலையில், தற்போதைய உரையாடல்கள் அன்பும் கனிவும் கொண்டதாக அமைந்ததாக, அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.

Credit: PA
அன்பு மகன்
தனது தொலைக்காட்சித் தொடர் மற்றும் சுயசரிதை புத்தகத்தில் ராஜ குடும்பத்தைக் குறித்து இளவரசர் ஹரி மோசமாக விமர்சித்ததைத் தொடர்ந்து, இனி ஹரியுடன் எந்த தொடர்பும் வைத்துக்கொள்ளவேண்டாம் என இளவரசர் வில்லியமும், ராணி கமீலாவும் மன்னரை வலியுறுத்தியுள்ளார்கள்.

Credit: Getty
ஆனால், தன் அன்பு மகனுக்காக தனது கதவுகளை திறந்தே வைத்துள்ள சார்லஸ், ஹரி பிரித்தானியாவுக்கு வரும்போதெல்லாம் தன்னை சந்திக்கலாம் என அழைப்பும் கொடுத்துள்ளார்.

Credit: Camera Press
இளவரசர் ஹரி மன்னரை அழைத்து அவருக்குப் பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய நிலையில், மன்னர், ஹரியின் மனைவியும் தன் மருமகளுமாகிய மேகனுடனும் பேசியதாகவும், மீண்டும் மூவரும் விரைவில் பேச இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Credit: Getty
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |