மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்பும் இளவரசர் ஹரியும் மேகனும்: பரபரப்பு தகவல்
இளவரசர் ஹரியும் மேகனும் மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளதைத் தொடர்ந்து பரபரப்பு உருவாகியுள்ளது.
கென்சிங்டன் மாளிகைக்கே திரும்புவதாக தகவல்
அதுவும், ஹரியும் மேகனும், கென்சிங்டன் மாளிகையிலேயே குடியிருப்பு ஒன்றை வாடகைக்கு எடுத்து தங்க இருப்பதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
தனது அண்ணனாகிய இளவரசர் வில்லியமுடனான உறவில் ஏற்பட்ட விரிசலை சரி செய்வதற்காகவே ஹரி பிரித்தானியா திரும்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
யாருக்கெல்லாம் இந்த செய்தி எரிச்சலையூட்டப்போகிறதோ?
ஹரி, கென்சிங்டன் மாளிகையில் ஒரு சிறிய வீட்டை வாடகைக்கு எடுக்க முடிவு செய்துள்ள நிலையில், அது புகழ் விரும்பியான அவரது மனைவி மேகனுக்கு எந்த அளவுக்கு திருப்திகரமான முடிவாக இருக்கும் என்பது தெரியவில்லை.
அதேபோல, மேகன் எப்படி இளவரசர் வில்லியமையும் இளவரசி கேட்டையும் எதிர்கொள்ளப்போகிறார் என்பதும் தெரியவில்லை.
சொல்லப்போனால், ஹரி விடயமே கேள்விக்குறியாகத்தான் உள்ளது. ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறியதும் அவரும் மேகனும் செய்த செயல்களால், அதாவது ஓபரா தொலைக்காட்சி போன்ற பேட்டிகள், தன் அண்ணனையும், ராணி கமீலாவையும் மோசமாக விமர்சித்தது ஆகிய விடயங்களால் ராஜ குடும்பம் கொந்தளித்துப்போயிருக்கும் நிலையில், அவற்றையெல்லாம் ஹரி எப்படி சரி செய்யப்போகிறாரோ தெரியவில்லை!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |