ஹரி மேகன் தம்பதியருக்கு கிடைத்த எதிர்பாராத வரவேற்பு
Prince Harry and Meghan welcomed to Nottingham: நாட்டிங்காம் நகருக்குச் சென்ற இளவரசர் ஹரி, மேகன் தம்பதியருக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டது.
இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ள நிலையில், பெரும்பாலும் அவர்கள் எதிர்மறையான விமர்சனங்களையே எதிர்கொண்டார்கள்.
இந்நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், அமோக வரவேற்பு கிடைத்துள்ளது தம்பதியருக்கு!

ஹரி மேகன் தம்பதியருக்கு கிடைத்த அமோக வரவேற்பு
ஹரியும் மேகனும் தங்கள் குழந்தைகளுடன் பிரித்தானியா திரும்பியபோது, ஊடகவியலாளர்கள் முதல் ராஜ குடும்ப விமர்சனர்கள் வரை பலரும் அவர்கள் ஏன் வந்தார்கள் என்னும் ரீதியிலேயே விமர்சித்துவந்தார்கள்.
போதாக்குறைக்கு, பக்கிங்காம் அரண்மனை வேறு, அவர்கள் இனி சாதாரண குடிமக்கள்தான் என அறிக்கை வெளியிட்டு அவர்களை சிறுமைப்படுத்தியது.
இந்நிலையில், எதிர்பாராத வகையில், இங்கிலாந்திலுள்ள ஒரு நகரத்துக்குச் சென்ற ஹரி, மேகன் தம்பதியருக்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.

ஹரியுடன் மக்கள் கைகுலுக்க, மேகனுக்கு மக்கள் பூங்கொத்துக்களை வழங்க, மேகன் ஹரியை திரும்பிப் பார்த்த பார்வையில், என்ன நடக்கிறது, எனக்கு புரியவில்லை என சொல்லாமல் சொல்வதுபோல் இருக்கிறது.

உற்சாகக் குரல் எழுப்பி மக்கள் வரவேற்க, மேகன் தன் ரசிகர்களைக் கட்டியணைத்துக்கொண்டார், ஹரி சிறுவர் பெரியவர் வித்தியாசமில்லாமல் மக்களுடன் அளவளாவினார்.

ஆக, மக்கள் மன நிலை மாறுகிறதோ என தோன்றுகிறது, வெளியாகியுள்ள புகைப்படங்களைப் பார்க்கும்போது!