இளவரசர் ஹரியை ட்ரம்ப் நாடுகடத்துவாரா? சட்டத்துறை நிபுணர் விளக்கம்
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் தனது குடும்பத்துடன் வாழ்ந்துவரும் பிரித்தானிய இளவரசர் ஹரி நாடுகடத்தப்படுவாரா என்னும் கேள்விக்கு சட்டத்துறை நிபுணர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
பதற்றமடைந்துள்ள இளவரசர் ஹரி மேகன் தம்பதி
ராஜ குடும்பத்தைப் பிரிந்து, பிரித்தானியாவிலிருந்து வெளியேறி, அமெரிக்காவில் குடியமர்ந்தார்கள் ஹரி, மேகன் தம்பதியர்.
ஆனால், கடந்த அமெரிக்க தேர்தலின்போது அவர்கள் தெரிவித்த சில கருத்துக்கள், ட்ரம்புக்கு எதிரானவையாக கருதப்பட்டன. அப்போது, ட்ரம்பும் ஹரி, மேகன் தம்பதியரை விமர்சித்திருந்தார்.
அத்துடன், அமெரிக்க விசா பெறும் விடயத்தில், போதைப்பொருட்கள் பயன்படுத்திய பிரச்சினை ஒன்றில் ஹரி பொய் சொன்னதாக எழுந்த விவகாரம் குறித்து விமர்சித்திருந்த ட்ரம்ப், தான் ஜனாதிபதியானால், ஹரி நாடுகடத்தப்படலாம் என்று கூறியிருக்கிறார்.
ஏற்கனவே, ராஜ குடும்பத்தையும் பிரித்தானியாவையும் விட்டு வெளியேறிவிட்ட நிலையில், தற்போது ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதால், அமெரிக்காவில் தங்கள் எதிர்காலம் குறித்து ஹரி மேகன் தம்பதியர் மிகவும் பதற்றமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
இளவரசர் ஹரியை ட்ரம்ப் நாடுகடத்துவாரா?
இந்நிலையில், ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, இளவரசர் ஹரி நாடுகடத்தப்படுவாரா என்னும் கேள்விக்கு சட்டத்துறை நிபுணர் ஒருவர் விளக்கமளித்துள்ளார்.
நியூயார்க் சட்டத்தரணியான மைக்கேல் வைல்ட்ஸ் (Michael Wildes) என்பவர், ட்ரம்ப் குடும்பத்துடன் பணியாற்றிய ஒருவர் ஆவார்.
அவர், ஹரி அமெரிக்காவில் வாழ, ட்ரம்ப் அனுமதிக்கக்கூடும் என நம்புகிறார். அதாவது, மன்னர் சார்லசுக்கு ஆதரவாக செயல்படுவதற்காக, அமெரிக்காவில் வாழ ஹரிக்கு ட்ரம்ப் அனுமதியளிக்கலாம் என தான் நம்புவதாக மைக்கேக் கூறுகிறார்.
தான் ட்ரம்புடன் பணியாற்றியவன் என்னும் முறையில், ட்ரம்ப் ஹரியின் தவறுகளை மன்னிக்கக்கூடும் என தான் நம்புவதாகவும் தெரிவித்துள்ளார் மைக்கேல்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |