அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படும் அபாயத்தில் இளவரசர் ஹரி: மேகன்தான் காரணம்
பிரித்தானிய இளவரசர் ஹரி அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படும் நிலை உருவாகியுள்ளதற்கு, ஹரியின் மனைவி மேகன்தான் காரணம் என ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஹரி அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படலாம்
இளவரசர் ஹரி தான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தனது ஸ்பேர் புத்தகத்தில் குறிப்பிட்டிருந்த விடயம் குறித்து ஹெரிட்டேஜ் ஃபவுண்டேஷன் என்னும் அமைப்பு பிரச்சினை எழுப்பியது.
அந்த பிரச்சினை தொடர்பில், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் மீது வழக்கு தொடர் உள்ளது ஹெரிட்டேஜ் ஃபவுண்டேஷன்.
விரைவில் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்க உள்ள நிலையில், அவர் ஹரி விவகாரத்தில் முறையான நடவடிக்கை எடுப்பார் என ஹெரிட்டேஜ் ஃபவுண்டேஷன் காத்திருக்கிறது.
அதாவது, ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்றபின், ஹரி அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படும் நிலை ஏற்படலாம் என்ற கருத்து நிலவிவருகிறது.
பிரச்சினைக்கு மேகன்தான் காரணம்
இப்படிப்பட்ட ஒரு சூழலில், ஹரிக்கும் ட்ரம்புக்கும் இடையிலான பிரச்சினைக்கு, ஹரியின் மனைவியான மேகன்தான் காரணம் என்கிறார் ராஜ குடும்ப நிபுணரான ஆர்தர் எட்வர்ட்ஸ்.
ஹரி தொடர்ந்து ராஜ குடும்பத்திலேயே பணி செய்பவராக இருந்திருப்பாரானால், இன்றைக்கு பிரச்சினையே இருந்திருக்காது என்கிறார் ஆர்தர்.
மேகன் ட்ரம்புடன் பிரச்சினை ஏற்படுத்தியதே ஹரியின் பிரச்சினைக்குக் காரணம் என்கிறார் அவர்.
மேகனால் ட்ரம்புடன் ஒத்துப்போக முடியவில்லை. அதனால்தான் ஹரியாலும் ட்ரம்புடன் ஒத்துப்போக முடியவில்லை.
இதுவே ஹரி ராஜ குடும்பத்துடன் இருந்திருந்தால், ஹரிக்கும் ட்ரம்புக்குமான உறவே வேறு மாதிரி இருந்திருக்கும் என்கிறார் ஆர்தர்.
ஹரி ராஜ குடும்பத்தில் இருந்திருப்பாரானால், ட்ரம்புடனான ஹரியின் உறவு எப்படி இருந்திருக்கும் என்பதைக் காட்ட, சமீபத்தில் இளவரசர் வில்லியமை பாரீஸில் ட்ரம்ப் சந்தித்தபோது, அவர் வில்லியமை எப்படி அன்புடனும் மரியாதையுடனும் நடத்தினார் என்பதை சுட்டிக் காட்டுகின்றன ஊடகங்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |