ஆண்ட்ரூ அரண்மனையில் இருந்து வெளியேற்றப்பட... மன்னருடன் நெருங்கும் இளவரசர் ஹரி
ஆண்ட்ரூவின் பட்டங்களை பறித்து, அவரை அரண்மனைக்கு சொந்தமான மாளிகையில் இருந்து வெளியேற்றும் சார்லஸ் மன்னரின் முடிவை இளவரசர் ஹரி ஆதரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நெருங்கிய தொடர்பில்
அமெரிக்காவில் குடும்பத்துடன் குடியிருக்கும் இளவரசர் ஹரி, தமது தந்தையை இந்த விவகாரத்தில் தொடர்பு கொண்டுள்ளதாகவும், சமீப நாட்களில் அது தொடர்வதாகவும் கூறப்படுகிறது.

ஆண்ட்ரூ விவகாரத்தில் மன்னரின் முடிவை தாம் ஆதரிப்பதாகவே ஹரி தெரிவித்துள்ளார். மட்டுமின்றி, செப்டம்பரில் அவர்களின் குறுகிய நேர லண்டன் சந்திப்பிலிருந்து மன்னருடன் நெருங்கிய தொடர்பில் உள்ளனர்.
அத்துடன், அமெரிக்காவில் வசித்து வந்தாலும், ஆண்ட்ரூவின் இரண்டு மகள்களுடனும் ஹரி நெருக்கமான உறவையே பேணி வருகிறார். ஆண்ட்ரூ விவகாரத்தில் ராணியார் கமிலாவும் முக்கிய முடிவுகள் எடுக்க ஆலோசனை வழங்கியுள்ளார்.
ஆண்ட்ரூ மற்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் இடையேயான பொருளாதார ரீதியான உறவு குறித்து ராணியார் கமிலாவுக்கு தகவல் கிடைத்தது என்றே கூறப்படுகிறது.

காவல்துறை விசாரணை
மேலும் அவரது நெருக்கமான வட்டாரத்தில் இருந்து ராணியாருக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. எப்ஸ்டீன் தொடர்பிலான மின்னஞ்சல்கள் மேலும் வெளிவர வாய்ப்பிருப்பதாகவும் எச்சரித்துள்ளனர்.

இதனிடையே, ஆண்ட்ரூவுக்கு எதிரான வர்ஜீனியா கியூஃப்ரேவின் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டுகள் குறித்து புதிய காவல்துறை விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளது.
அமெரிக்காவில் உள்ள அரசியல்வாதிகளும் ஆண்ட்ரூவை எப்ஸ்டீனுடனான தொடர்புகள் குறித்த கேள்விகளை எதிர்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |