எங்கள் தாய் டயானாவின் மரணத்தை சுயஇலாபத்துக்காக பயன்படுத்திக்கொள்கிறார்: ஹரியால் குற்றம் சாட்டப்படும் நபர்
அவரை எங்கள் தாய் அன்பு நண்பர் என்று அழைத்தார். ஆனால், அவர் எங்கள் தாயின் மரணத்தை வைத்து பணம்பார்க்கிறார் என ஒருவர் மீது குற்றம் சாட்டியுள்ளார் இளவரசர் ஹரி.
அவரை நாங்கள் நம்பினோம்...
அவரை எங்கள் தாய் நம்பினார், நாங்களும் அவரை நம்பினோம். ஆனால், அவர் எங்கள் தாய் டயானாவின் மரணத்தை சுயஇலாபத்துக்காக பயன்படுத்திக்கொண்டார் என இளவரசர் ஹரியால் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர், Paul Burrell.
இந்த Paul Burrell, இளவரசி டயானாவின் பட்லராக இருந்தவர் ஆவார். தன்னை டயானாவின் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒரே நபர் என டயானாவே கூறியதாக கூறியிருந்தார் அவர்.
@KARWAI TANG/WIREIMAGE
என் இரத்தம் கொதித்தது
இந்த Paul Burrell இளவரசி டயானாவின் மரணத்தைக் குறித்து 'A Royal Duty' என்னும் புத்தகத்தை எழுதினார். அத்துடன், அவ்வப்போது டயானாவைக் குறித்து பேட்டிகளும் கொடுப்பதுண்டு அவர்.
அப்படியே ஒரு தொகை பார்த்துவிட்டாராம் இந்த Paul Burrell. ஆனால், இளவரசி டயானாவின் நண்பர் என அழைக்கப்பட்ட அவர், டயானாவின் மரணத்தை சுயைலாபத்துக்காக பயன்படுத்தி, அதை வைத்து பணம் பார்த்துவிட்டதாக தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் இளவரசர் ஹரி.
Paul Burrell இளவரசி டயானாவைக் குறித்து புத்தகம் எழுதியதைக் குறித்து அறிந்ததும், தன் இரத்தம் கொதித்ததாகத் தெரிவிக்கும் ஹரி, அவரைத் தட்டிக் கேட்பதற்காக புறப்பட்டாராம்.
@ Rex Features
ஆனால், அவரது தந்தை சார்லசும், அண்ணன் வில்லியமும் ஹரியைத் தடுத்துவிட்டதாகவும், இல்லையென்றால், இந்த Paul Burrellஐ ஒரு வழி பண்ணியிருப்பேன் என்றும் கூறியுள்ளார் ஹரி!
@Rex Features