இளவரசர் ஹரியின் நினைவுக் குறிப்புகள்... ராஜகுடும்பத்தின் வெளிவராத அந்தரங்கம் அலசப்பட்டுள்ளது!
குறிப்பிட்டுள்ள பல தகவல்கள் ராஜகுடும்பத்தை மொத்தமாக உலுக்கும் என்றே நம்பப்படுகிறது.
மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா தொடர்பான இதுவரை வெளிவராத முகம் என பல ரகசியங்கள் அம்பலமாகும்
இளவரசர் ஹரியின் நினைவுக் குறிப்புகள் நூலானது ராஜகுடும்பத்தின் இதுவரை வெளிவராத அந்தரங்க தகவல்களை மொத்தமாக அம்பலப்படுத்தும் என அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த நூல் தொடர்பில், இளவரசர் ஹரி மற்றும் வெளியீட்டாளர்கள் பலமுறை திருத்தல்கள் மேற்கொண்டதாகவும் கூறப்படுகிறது. அதில் குறிப்பிட்டுள்ள பல தகவல்கள் ராஜகுடும்பத்தை மொத்தமாக உலுக்கும் என்றே நம்பப்படுகிறது.
@getty
மட்டுமின்றி, தமது நெருக்கமான நண்பர்கள் முன்னாள் காதலிகள் ஆகியோர்களை குறித்த நூலின் ஆசிரியருடன் கலந்துரையாடவும் இளவரசர் ஹரி கட்டாயப்படுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.
Spare என தலைப்பிடப்பட்டுள்ள குறித்த நூலானது உண்மையில் இந்த ஆண்டு வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் ராணியார் காலமான நிலையில், நூல் வெளியீடும் தாமதமானதுடன், தற்போது எதிர்வரும் ஜனவரி 10ம் திகதி Spare நூலானது வெளியாகவிருக்கிறது.
Credit: The Mega Agency
மேலும், இளவரசர் ஹரி பலமுறை திருத்தங்கள் செய்துள்ளதாகவும், ராஜகுடும்பத்து உறுப்பினர்களின் இனவாதம், மன்னர் சார்லஸ் மற்றும் கமிலா தொடர்பான இதுவரை வெளிவராத முகம் என பல ரகசியங்கள் அம்பலமாகும் என்றே கூறப்படுகிறது.
முதலில் இளவரசர் கூறிய தகவல்களில் போதுமான சுவாரசியம் இல்லை என நிராகரிக்கப்பட்டு, தொடர்ந்து விரிவான பல தகவல்கள் பின்னர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இளவரசர் ஹரியிடம் இருந்து எதிர்பார்க்க முடியாத பல அந்தரங்க தகவல்களும் இணைக்கப்பட்டிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது.
Credit: Rex Features
மட்டுமின்றி, இளவரசி டயானாவை பிரித்தானிய ராஜகுடும்பம் எவ்வாறு நடத்தியது என்பது தொடர்பில் ஹரி அம்பலப்படுத்துவார் என்ற அச்சமும் எழுந்துள்ளது.