உணர்ச்சிக் குவியல்களுக்கு மத்தியில் பிறந்தநாளைக் கொண்டாடும் இளவரசர் ஹரி
பிரித்தானிய இளவரசர் ஹரி, இன்று தனது 39ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகளுக்காக ஜேர்மனி சென்றுள்ள அவர், தன் மனைவி மேகனுடன் தனது பிறந்தநாளை செலவிடுகிறார்.
உணர்ச்சிக் குவியல்களுக்கு மத்தியில் பிறந்தநாள்
இந்த பிறந்தநாளைப் பொருத்தவரை, அது உணர்ச்சிகளால் நிறைந்த ஒரு பிறந்தநாள் ஹரிக்கு. காரணம், சமீபத்தில்தான் அவரது அன்பிற்குரிய பாட்டியாரின் மறைவு தினம் அநுசரிக்கப்பட்டது.
(Image: Getty Images)
பாட்டியாரின் கல்லறைக்குச் சென்ற ஹரி, தன்னந்தனியே கண்ணீர் வடித்தபடி நின்றதைக் குறித்த செய்திகள் வெளியானது நினைவிருக்கலாம்.
அதேபோல, அவரது தாயாரின் 26ஆவது நினைவுநாளும் கடந்த மாதம்தான் அநுசரிக்கப்பட்டது. மனைவி மேகன் தவிர, ஹரியுடன் யாரும் இல்லை. அவரது பிள்ளைகளும் அமெரிக்காவில் இருக்கிறார்கள்.
(Image: Getty Images)
அவரது தந்தை, சகோதரர் வில்லியமிடமிருந்து அவருக்கு வாழ்த்துச் செய்தி ஏதாவது வந்ததா என்பதும் இதுவரை தெரியவரவில்லை.
(Image: Getty Images)
ஆக மொத்தத்தில், இந்த பிறந்தநாள் ஹரிக்கு உணர்ச்சிப்பூர்வமான பிறந்தநாளாக அமைந்துவிட்டது.
(Image: Getty Images for Invictus Games Düsseldorf 2023)
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |