அரச கடமையா அல்லது மேகன் மார்க்கலா.! குழப்பத்தில் சிக்கித்தவிக்கும் இளவரசர் ஹரி
ராணியின் மரணத்திற்கு பிறகு மனைவி மற்றும் குழந்தைகளா அல்லது தந்தையும் அரச கடமைகளுமா என ஹரி மனப்போராட்டம்.
மன்னர் சார்லஸ் ஹரியை நிபந்தனையின் கீழ் மீண்டும் அரச குடும்பத்திற்குள் அழைத்துச் செல்ல தயாராக இருப்பதாக தகவல்.
இளவரசர் ஹரி தனது பாட்டி ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்திற்குப் பிறகு மேகன் மார்க்கல் பக்கமே தொடர்ந்து நிற்பதா அல்லது அரச கடமைகளைத் தேர்ந்தெடுப்பதா என பெரும் மனப்போராட்டத்தில் இருந்ததாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
செப்டம்பரில் இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்ட பிறகு, இளவரசர் ஹரியும் மேகன் மார்க்கலும் இப்போது மீண்டும் கலிபோர்னியாவுக்கு வந்துள்ளனர்.
ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணம், இளவரசர் ஹரிக்கு ஏக்கத்தைத் தூண்டியதாகவும், அந்த நிலையில் அவர் மீண்டும் அவரது அரச பணிகளுக்குச் செல்ல வேண்டுமா அல்லது மேகன் மார்க்ல் மற்றும் அவர்களது குழந்தைகளுடன் கலிபோர்னியாவில் தங்க வேண்டுமா என்ற குழப்பத்தை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
செப்டம்பரில் இங்கிலாந்தில் நடந்த இறுதிச் சடங்குகளில் இருவரும் அரச குடும்பத்தினர் என்ற முறையில் பங்கேற்றனர். அவர்கள் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் மிடில்டனுடன் சேர்ந்து வின்ட்சர் கோட்டைக்கு வெளியே நடைபயணம் மேற்கொண்டனர், மேலும் வெஸ்ட்மின்ஸ்டர் ஹாலில் அவரது சவப்பெட்டியின் மீது நடந்த இறுதி அஞ்சலி நடைமுறையில் (Vigil) கலந்து கொண்டனர். செப். 19-ஆம் திகதி நடைபெற்ற அரச இறுதிச் சடங்கிலும் அவர்கள் கலந்துகொண்டனர்.
Reuters
2020-ஆம் ஆண்டில் அவர்கள் தங்கள் அரச கடமைகளை விட்டு வெளியேறிய பின்னர், இதுபோன்ற சவாலான நேரத்தில் பிரித்தானிய அரச குடும்பத்துடன் அவர்கள் செலவழித்த அதிக நேரம் இதுவாகும்.
ராணியின் மரணம் தொடர்பான விழா இளவரசர் ஹரியை ஆழமாக பாதித்ததாகக் கூறப்படுகிறது, இந்த தகவலை பெயர் சொல்ல விரும்பாத ஒரு நபர் அக்டோபர் 10-ஆம் திகதி வெளியாகவுள்ள ஸ்டார் பத்திரிகையில் தெரிவித்துள்ளது.
இப்போது இளவரசர் ஹரி தனது தந்தை மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் மேகன் மார்க்கலைத் தேர்ந்தெடுப்பதற்கு இடையில் சிக்கிக்கொண்டதாகவும், அவர் அரச குடும்பத்துடன் எதுவும் செய்ய விரும்பவில்லை என்றும் கூறப்படுகிறது.
Archewell Foundation & Matt Dunham/AP/Shutterstock
அதே நபர், மேகன் மார்க்கம் பற்றி கூறியபோது, அவர் தனது குழந்தைகளான ஆர்ச்சி(3) மற்றும் லிலிபெட் (1) ஆகியோருடன் "கலிபோர்னியாவின் மான்டெசிட்டோவில் தங்கள் புதிய வாழ்க்கையைத் தொடர வேண்டும் என்பதைத் தவிர மேகனுக்கு வேறு எந்த எண்ணமும் இல்லை" என்று கூறினார்.
அதே நபர், மன்னர் மூன்றாம் சார்லஸ் இளவரசர் ஹரியை "qno more drama" அதாவது இனி எந்த நாடககும் இருக்கக்கூடாது என்ற நிபந்தனையின் கீழ் மீண்டும் அரச குடும்பத்திற்குள் அழைத்துச் செல்ல தயாராக இருக்கிறார் என்று கூறுகிறார்.
Photo: Jeff J Mitchell - WPA Pool/Getty Images
இளவரசர் ஹரி தனது சொந்த வாழ்க்கை மற்றும் அரச குடும்பத்துடனான உறவு குறித்து தற்போது எது சிறந்தது என்பதை தீர்மானிக்க முடியாது என்று அந்த ஆதாரம் கூறியது. "அவர் இருபக்கத்திற்கும் நடுவில் சிக்கிக்கொண்டுள்ளார்., ஏனெனில் பல வழிகளில், மக்களுக்கு சேவை செய்ய அவர் கடமைப்பட்டதாக உணர்கிறார், ஆனால் மேகனுடனான தனது திருமணத்தை அவர் கைவிட வழியில்லை" என்று கூறியுள்ளார்.
இருப்பினும், இளவரசர் ஹரியின் நினைவுக் குறிப்பு எப்போது வெளிவரும் என்பது குறித்து இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை. ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்குப் பிறகு அவர் தனது அரச கடமைகளுக்குத் திரும்புவதற்கான விருப்பத்தை தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தவில்லை. இப்போதைக்கு, இளவரசர் ஹரி பற்றிய தகவல்கள் அனைத்தும் சரிபார்க்கப்படாத ஆதாரங்களில் இருந்து வருகின்றன.