மன்னர் சார்லஸின் இரண்டாவது மனைவி கமீலா குறித்து மோசமாக பேசிய இளவரசர் ஹரி! கசிந்த தகவல்கள்
பிரித்தானிய மன்னர் சார்லஸின் மனைவி கமீலா தொடர்பான புதிய தகவல்களை கூறும் புத்தகம்.
அரச குடும்ப நிபுணரும், எழுத்தாளருமான ஏஞ்சலா லிவின் வெளியிட்ட விடயங்கள்.
இளவரசர் ஹரி தனது சித்தியான கமீலா குறித்து மோசமான மற்றும் விரும்பத்தகாத விஷயங்களை பேசினார் என அரச நிபுணர் தெரிவித்துள்ளார்.
எழுத்தாளரான ஏஞ்சலா லிவின் எழுதிய Camilla: From Outcast to Queen Consort என்ற புத்தகத்தில் தான் கமீலா தொடர்பான புதிய தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அதில், அரச குடும்பத்தின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவராக கமீலா எவ்வாறு மாறினார் என்பது தொடர்பாக ஆராயப்பட்டுள்ளது. மேலும் Queen Consort பதிவியை ஏற்றுள்ள கமீலா பல ஆண்டுகளாக சித்தரிக்கப்பட்ட விதத்தை மறுசீரமைக்கும் முயற்சியிலும் முக்கிய தகவல்களை லிவின் குறிப்பிட்டுள்ளார்.
economictimes
தனது தந்தையின் இரண்டாவது மனைவியும், தனது சித்தியுமான கமீலா குறித்து இளவரசர் ஹரி மோசமான மற்றும் விரும்பத்தகாத கருத்துகளை பேசியதாக அவர் குற்றஞ்சாட்டியிருக்கிறார்.
கமீலாவை தவறாக காட்ட முயற்சி நடந்ததாகவும், அந்த சித்தரிப்புகள் உண்மையில் கொடுமையானது எனவும் எடுத்துரைக்கிறார்.