ஒரே நேரத்தில் அமெரிக்கா செல்லும் இளவரசர்கள் ஹரியும் வில்லியமும்... தீராப்பகை முடிவுக்கு வருமா?
பிரித்தானிய இளவரசர் ஹரி அடுத்த மாதம் அமெரிக்கா செல்ல இருக்கும் அதே நேரத்தில், அவரது அண்ணனான இளவரசர் வில்லியமும் அமெரிக்காவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கவேண்டியுள்ளது.
அண்ணனும் தம்பியும் சந்தித்துக்கொள்வார்களா என ராஜ குடும்ப ரசிகர்கள் இப்போதே ஆவலுடன் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
அமெரிக்கா செல்லும் இளவரசர் ஹரியும் வில்லியமும்
இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவி மேகன் உருவாக்கிய ஆர்ச்வெல் தொண்டு நிறுவனம் தொடர்பிலான பணிகள் மற்றும் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, ஹரி அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் அமெரிக்கா செல்கிறார்.
அதே நேரத்தில், இளவரசர் வில்லியம் உருவாக்கிய Earthshot Prize Innovation Summit என்னும் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால், அந்த மாநாடும் அடுத்த மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 24ஆம் திகதிதான் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.
ஆக, அமெரிக்காவிலாவது அண்ணனும் தம்பியும் சந்தித்துக்கொள்வார்களா, பேசிக்கொள்வார்களா, அவர்களுக்கிடையிலிருக்கும் பகை தீருமா என ராஜ குடும்ப ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
இதற்கு முன், மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்கின்போது இளவரசர்கள் வில்லியமும் ஹரியும் சந்தித்துக்கொண்டார்கள்.
அது நடந்து இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில், அதற்குப் பின் இருவரும் இதுவரை சந்தித்துக்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |