வழக்குத் தொடர்ந்துவிட்டு நீதிமன்றம் வராத இளவரசர் ஹரி மீது குற்றச்சாட்டு
தனது தொலைபேசி ஒட்டுக்கேட்கப்பட்டதாக பிரபல பிரித்தானிய ஊடகமான தி மிரர் குழுமம் மீது இளவரசர் ஹரி வழக்குத் தொடர்ந்துள்ள நிலையில், வழக்கு விசாரணையின் முதல் நாளான நேற்று, திங்கட்கிழமை ஹரி நீதிமன்றத்துக்கு வரவில்லை.
ஹரி மீது குற்றச்சாட்டு
வழக்கு விசாரணையின் முதல் நாளே ஹரி நீதிமன்றத்துக்கு வராதது தன்னை வியப்புக்குள்ளாக்கியதாக நீதிபதி Fancourt தெரிவித்தார்.
அத்துடன், தி மிரர் ஊடக குழுமம் சார்பில் ஆஜரான சட்டத்தரணியாகிய Andrew Green, ஹரி நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிப்பதாக குற்றம் சாட்டினார்.
Credit: Reuters
ஹரி ஏன் வரவில்லை?
இளவரசர் ஹரியின் மகளான லிலிபெட்டின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் அவர் கலந்து கொள்ளவேண்டியிருந்ததால்தான் ஹரியால் நீதிமன்றத்துக்கு வர முடியவில்லை என அவரது சட்டத்தரணியான David Sherborne தெரிவித்தார்.
Credit: PA
ஹரியுடைய பயணம் மற்றும் பாதுகாப்பு காரணமாக அவரை நீதிமன்றத்துக்குக் கொண்டு வர விசேஷ நடவடிக்கைகள் எடுக்கவேண்டியிருப்பதாகவும் Sherborne தெரிவித்தார்.
Credit: Getty
அத்துடன், அடுத்த விசாரணையின்போது, அதாவது, இன்று நடைபெற இருக்கும் விசாரணையின்போது, ஹரி நீதிமன்றத்தில் இருப்பார் என்றும் அவர் தெரிவித்தார்.
Credit: PA