ஹரியின் முன்னாள் காதலி சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம்: குவியும் பாராட்டுகள்
இளவரசர் ஹரியின் முன்னாள் காதலியான செல்சி டேவி, சமூக ஊடகம் ஒன்றில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றைத் தொடர்ந்து அவருக்கு பாராட்டுகள் குவிகின்றன.
ஹரியின் முன்னாள் காதலி
இளவரசர் ஹரியும், செல்சி டேவி (Chelsy Davy) என்னும் ஜிம்பாபே நாட்டவரான இளம்பெண்ணும் 2004ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டுவரை காதலித்துவந்தார்கள்.
ஒருமுறை அர்ஜெண்டினாவுக்குச் சென்றிருந்தபோது, டேவி தன் தோழி ஒருவரிடம் தொலைபேசியில் பேசியிருக்கிறார். அடுத்த நிமிடம், அவர்கள் தங்கியிருந்த இடத்தை புகைப்படக்காரர்கள் சூழ்ந்துகொண்டார்களாம்.
அந்த விடயம் டேவிக்கு அச்சத்தை ஏற்படுத்தியதாம். தான் தொடர்ச்சியாக கண்காணிக்கப்படுவதாக, வேறு வார்த்தையில் சொன்னால், தான் வேட்டையாடப்படுவதாக எண்ணி டேவி நடுங்கிப்போனாராம்.
அதாவது, ஹரி மேகனுடைய தொலைபேசி உரையாடல்கள் தொடர்ந்து ஒற்றுக்கேட்கப்பட்டு வந்துள்ளன.
ஒருகட்டத்தில், தன் காதலி ஊடகங்களால் துன்புறுத்தப்பட்டு கொல்லப்படுவார் என தனக்கு அச்சம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார் ஹரி.
பின்னர் ஒரு கட்டத்தில் இருவரும் நிரந்தரமாகப் பிரிந்துவிட்டார்கள். டேவி, marry Sam Cutmore-Scott என்பவரைத் திருமணம் செய்துகொள்ள, ஹரி, மேகன் மெர்க்கலை திருமணம் செய்துகொண்டார்.
சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம்
டேவி தற்போது சமூக ஊடகமான இன்ஸ்டாகிராமில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, டேவிக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது.
தனது குழந்தையுடன் தான் நிற்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள டேவி, தன் குழந்தைக்கு Chloe என பெயர் வைத்துள்ளதாகவும், தனது நகை பிராண்டுக்கும் அதே பெயரையே வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
டேவியின் ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துவருகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |