இளவரசர் ஹரியின் முன்னாள் காதலி வெளிநாடொன்றில் கைது
இளவரசர் ஹரியின் முன்னாள் காதலிகளில் ஒருவர் கைது செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
இளவரசர் ஹரியின் முன்னாள் காதலி கைது
இளவரசர் ஹரி, மேகனை திருமணம் செய்யும் முன் பல பெண்களை காதலித்தவர் என்பது உலகம் அறிந்த விடயம்தான்.

Credit : The US Sun
அவர்களில் ஒருவர் தொலைக்காட்சிப் பிரபலமான கேத்தரின் ஓமன்னே (Catherine Ommanney, 53). அவர் ஸ்பெயின் நாட்டுக்குச் சொந்தமான மயோர்க்கா (Majorca) தீவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Credit: Solarpix
ஹொட்டல் ஒன்றில் ஒன்பது நாட்கள் தங்கியிருந்த கேத்தரின், ஹொட்டல் கட்டணமான 475 பவுண்டுகளை செலுத்தாமலே ஹொட்டலிலிருந்து வெளியேறியதாக ஹொட்டல் மேலாளர் பொலிசில் புகாரளிக்க, பொலிசார் கேத்தரினை கைது செய்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன், நீதிமன்றத்திலிருந்து கேத்தரின் வெளியேறும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.

ஆனால், தன்னைக் குறித்து வெளியாகியுள்ள செய்திகளில் உண்மை இல்லை என கூறியுள்ள கேத்தரின், தான் ஹொட்டல் கட்டணத்தை முழுமையாக செலுத்திவிட்டதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன், ஹொட்டல் தரப்பில் ஏதோ தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பிரச்சினை ஏற்பட்டதாலேயே அவர்கள் தான் கட்டணம் செலுத்தவில்லை என கூறியுள்ளதாகவும், தன்னிடம் கட்டணம் செலுத்தியதற்கான ரசீது இருப்பதாகவும் தெரிவித்துள்ள கேத்தரின், ஹொட்டல் நிர்வாகத்தை சட்டப்படி மன்னிப்புக்கோர வைக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரியும் கேத்தரினும் 2006ஆம் ஆண்டு சிறிது காலம் காதலித்துவந்தார்கள். அப்போது ஹரிக்கு 21 வயது, கேத்தரினுக்கு 34 வயது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |