துயர முடிவெடுத்த இளவரசர் ஹரியின் முன்னாள் காதலி: கடைசியாக அனுப்பிய குறுஞ்செய்தி
தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்ட இளவரசர் ஹரியின் முன்னாள் காதலி கடைசியாக அனுப்பிய குறுஞ்செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.
இளவரசர் ஹரியின் முன்னாள் காதலி

2009ஆம் ஆண்டு, இளவரசர் ஹரி, தொலைக்காட்சி பிரபலமான கரோலின் (Caroline Flack) என்ற பெண்ணுடன் பழகத் துவங்கியுள்ளார்.
இந்த விடயம் ஊடகங்களில் வெளியானதும், கரோலினுடய வீடு, அவரது பெற்றோர் மற்றும் தாத்தா பாட்டி வீடு என அவருடன் தொடர்புடைய அனைத்து இடங்களையும் ஊடகவியலாளர்கள் மொய்க்கத்துவங்கிவிட்டார்களாம்.
ஒரு கட்டத்தில், இப்படி ஒரு வருத்தத்தையும் தொல்லையையும் கொடுக்கக்கூடிய ஒரு உறவு தேவையா என கருதிய ஜோடி, குறிப்பாக கரோலினுடய குடும்பம் சந்தித்த தொல்லைகளைத் தொடர்ந்து, பிரிவதென முடிவு செய்து, இருவரும் பிரியாவிடை அளித்துப் பிரிந்தனராம்.

பின்னர், வாழ்வில் பல்வேறு பிரச்சினைகளையும், அவமானத்தையும் சந்தித்த கரோலின், லண்டனிலுள்ள தனது வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் தன் உயிரைத் தானே மாய்த்துக்கொண்டதாக செய்திகள் வெளியாகின.
கடைசியாக அனுப்பிய குறுஞ்செய்தி
இந்நிலையில், கரோலின் தன் உயிரை மாய்த்துக்கொள்வதற்கு முன் கடைசியாக அனுப்பிய குறுஞ்செய்திகள் குறித்த சில தகவல்களை ஆவணப்படம் ஒன்றிற்காக கரோலினுடைய தாயாகிய Christine வெளியிட்டுள்ளார்.

தனது காதலரான Lewis Burton என்பவரை தாக்கியதாக குற்றம் சாட்டப்பட்டு கரோலின் கைது செய்யப்பட்டார்.

அவரது காதலரே அந்த குற்றச்சாட்டுகளைக் கைவிடுமாறு கோரியும் அதிகாரிகள் விடாமல் வழக்கை பின்தொடர்ந்தார்கள்.
2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 15ஆம் திகதி கரோலின் தனது வீட்டில் உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
அடுத்து என்ன நடக்குமோ, சிறை செல்லவேண்டியிருக்குமோ என கடும் மன உளைச்சலுக்குள்ளானார் கரோலின்.
ஹரி விடயத்தைப் போலவே, அவர் தன் காதலனை தாக்கியதாக கூறப்படும் விடயம் குறித்தும் ஊடகங்கள் ஆளாளுக்கு எழுத, கடைசியில் தன் உயிரையே மாய்த்துக்கொண்டார் கரோலின்.

இந்நிலையில், அவர் கடைசியாக அனுப்பிய குறிஞ்செய்திகளில் ஒன்றில், ’இதுவரை இல்லாத அளவுக்கு மனம் சோர்ந்திருக்கிறேன் என்றும் இந்த பிரச்சினையிலிருந்து வெளியேற வாய்ப்பேயில்லை’ என்றும் கரோலின் தனது மொபைல் மூலம் தெரிவித்ததாக கூறியுள்ளார் கரோலினுடைய தாய்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |