பிரித்தானிய ராஜகுடும்பத்திற்கு மரண பயத்தை காட்டும் அந்த தகவல் வெளியானது
இரண்டாம் எலிசபெத் ராணியாரின் மறைவால், குறித்த புத்தகமானது வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது
குறிப்பிட்ட சில பகுதிகள் உணர்ச்சியற்றதாகக் கருதப்படும் என்று ஹரி அச்சம் தெரிவித்துள்ளார்
மன்னர் சார்லஸ் உட்பட பிரித்தானிய ராஜகுடும்பம் ஒருவித பயத்துடன் காத்திருந்த அந்த தகவல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
தமது வாழ்க்கை மற்றும் இதுவரையான அனுபவம் தொடர்பில் வெளிப்படையாக, ஒளிவு மறைவின்றி பதிவு செய்துள்ள இளவரசர் ஹரியின் நினைவுப் புத்தகம் எதிர்வரும் ஜனவரி 10ம் திகதி வெளியாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
@getty
குறித்த புத்தகத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்ட 35 மில்லியன் பவுண்டுகள் தொகையில் பாதியை இளவரசர் ஹரி ஏற்கனவே கைப்பற்றியுள்ளார். ஆனால் இரண்டாம் எலிசபெத் ராணியாரின் மறைவால், குறித்த புத்தகமானது வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டது.
மட்டுமின்றி, தாம் முன்னரே குறிப்பிட்ட சில முக்கிய தகவல்களில் கடைசி நேர திருத்தங்களை கொண்டுவர ஹரி முயன்றுள்ளார். மேலும், ராணியாரின் மரணம், அரியணையை ஏற்கவிருக்கும் சார்லஸ் என, குறிப்பிட்ட சில பகுதிகள் உணர்ச்சியற்றதாகக் கருதப்படும் என்று ஹரி அச்சம் தெரிவித்துள்ளார் என்றே கூறப்படுகிறது.
பிரித்தானிய அரண்மனையில் இருந்து வெளியேறி சுமார் 3 ஆண்டுகளுக்கு பின்னர், இந்த நினைவுப் புத்தகம் வெளியிடப்படுகிறது. கடந்த 2020 ஜனவரி 8ம் திகதி இளவரசர் ஹரி- மேகன் தம்பதி அந்த முக்கிய முடிவை அறிவித்தார்கள்.
@AFP
அதாவது ராஜகுடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் வரிசையில் இருந்து தாங்கள் விலகிக்கொள்ள இருப்பதாக தெரிவித்தனர். தற்போது அந்த விவகாரம் தொடர்பிலும், தாம் வளர்ந்த சூழல் தொடர்பிலும், அரண்மனை வாழ்க்கை என்றால் என்ன என்பது தொடர்பிலும் ஹரி தமது புத்தகத்தில் வெளிப்படுத்துவார் என்றே நம்பப்படுகிறது.
இளவரசர் ஹரிக்கு பதிலாக குறித்த புத்தகத்தை அமெரிக்க எழுத்தாளரான JR Moehringer முன்னெடுத்துள்ளார். ஏற்கனவே, ராஜகுடும்பம் தொடர்பில் ஓப்ரா வின்ஃப்ரே நேர்காணலில் வெளிப்படையாக பேசியிருந்தார் இளவரசர் ஹரி.
@getty
ராஜகுடும்பத்து மூத்த உறுப்பினர் ஒருவர் இனவாத ரீதியாக கருத்து தெரிவித்ததாகவும், தமது தந்தை சார்லஸ் நிதியுதவி செய்ய மறுப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
தமது நினவுப் புத்தகம் தனது வாழ்க்கையை துல்லியமாகவும் முற்றிலும் உண்மையாகவும் பிரதிபலிக்கும் எனவும், மக்கள் முதன்முறையாக தம்மை அறிந்துகொள்ள இருக்கிறார்கள் எனவும் இளவரசர் ஹரி ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.