புதிய வீட்டில் குடியேறிய இளவரசர் ஹரி குடும்பம்
Prince Harry's family move into new Cotswolds home: இளவரசர் ஹரி பிரித்தானியாவில் வாழ, வீடு கிடைத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவை விட்டு வெளியேறி, அமெரிக்காவில் வாழ்ந்துவந்த இளவரசர் ஹரி குடும்பம், மீண்டும் பிரித்தானியா திரும்பியுள்ளது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில், ஹரி குடும்பம் பிரித்தானியாவில் வாழ வீடொன்றைக் கண்டுபிடித்துவிட்டதாக பிரித்தானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
புதிய வீட்டில் குடியேறிய இளவரசர் ஹரி குடும்பம்
சமீபத்தில், ஹரியின் மனைவியான மேகன், Cotswolds என்னும் பகுதியில் அமைந்துள்ள பண்ணை வீடு ஒன்றிற்குச் செல்லும் காட்சிகள் வெளியாகின.

அதைத் தொடர்ந்து, அப்பகுதியிலுள்ள ஆக்ஸ்ஃபோர்ட்ஷையரில் ஹரியும் மேகனும் தங்கக்கூடும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில், உண்மையாகவே ஹரி குடும்பம் Cotswolds பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் தற்போது குடியேறியுள்ளதாம். அப்படியானால், இவ்வளவு நாட்களாக ஹரி குடும்பம் எங்கு தங்கியிருந்தது என்னும் கேள்வி எழுவதை மறுப்பதற்கில்லை.
ஏனென்றால், ராஜ குடும்பத்துக்கு சொந்தமாக ஏராளமான மாளிகைகள் இருந்தும், பிரித்தானியா திரும்பியுள்ள ஹரி, மேகன் தம்பதியர் சாதாரண குடிமக்களே என மன்னர் அறிவித்துவிட்ட நிலையில், அவர்களுக்கு அரண்மனையில் இடமளிக்கப்படவில்லை என்பது தெரிந்த விடயம்.
அதாவது, ஹரி, மேகன் தம்பதியர், தங்கள் குழந்தைகளுடன், தொழிலதிபரான தங்கள் நண்பர் ஒருவருக்குச் சொந்தமான எஸ்டேட் ஒன்றில், ஒரு வீட்டில் தங்கியிருந்தார்களாம்.
இப்போது, Cotswolds பகுதியில் அமைந்துள்ள அதே எஸ்டேட்டில் உள்ள ஒரு வீட்டில், ஹரி குடும்பம் குடியேறியுள்ளதாக அந்த தொழிலதிபரின் நண்பர் ஒருவர் தெரிவித்துள்ளார்.