இளம்பெண்ணின் தோளில் கைபோட்ட இளவரசர் ஹரி: கையை தள்ளிவிட்ட தாய்
இளவரசர் ஹரி, சிறுவயதில் உலகம் முழுவதும் பிரபலமான ஒரு இளம்பெண்ணின் தோளில் நட்புடன் கைபோட, அந்தப் பெண்ணின் தாய் ஹரியின் கையை தட்டிவிட்ட ஒரு சம்பவம் குறித்து பகிர்ந்துள்ளார் அந்தப் பெண்.

யார் அந்தப் பெண்?
அந்தப் பெண், மலாலா யூசப்சையி (28). பாகிஸ்தானில் பிறந்து, பெண்கள் உரிமைக்காக குரல் கொடுத்ததால் தாலிபான்களால் சுடப்பட்டு உயிர் தப்பிய மலாலா, 2014ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்றவர் ஆவார்.
நோபல் பரிசு பெற்ற மலாலா, இளவரசர் ஹரியுடன் புகைப்படம் எடுத்துகொள்ளச் சென்றுள்ளார்.
புகைப்படம் எடுக்கும்போது ஹரி மலாலாவின் தோளில் நட்புடன் கைபோட்டுக்கொள்ள, உடனே அவரது மலாலாவின் தாயான தூர் (Toor Pekai Yousafzai), ஹரியின் கையைத் தட்டி விட்டுள்ளார்.

அத்துடன், ’கையை எடுங்கள், தொடக்கூடாது’ என தூர் கூற, ஹரி அதிர்ச்சியடைந்துள்ளார். மலாலா தர்மசங்கமாக தவிக்க, ஹரி அதை புரிந்துகொண்டு, சமாளித்தபடி புகைப்படத்துக்கு போஸ் கொடுத்தாராம்.

தன் தாய் பள்ளிக்கே செல்லாத பாகிஸ்தானைச் சேர்ந்த ஒரு சாதாரண பெண். தங்கள் பாரம்பரியப்படி பெண்களை ஆண்கள் தொடக்கூடாது என்பதற்காகவே அவர் அப்படிச் செய்தார் என்கிறார் மலாலா.

அதேபோல, பிரபல பிரித்தானிய கால்பந்து வீரரான டேவிட் பெக்காம், மலாலாவுக்கு Pride of Britain Award என்னும் விருதை வழங்கும்போதும், அவருடன் மலாலா இருக்கும் புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாக, பாகிஸ்தானிலுள்ள மலாலாவின் உறவினர்கள், என்ன, மலாலா ஒரு ஆணுடன் புகைப்படத்துக்கு போஸ் கொடுத்திருக்கிறாளே என கேள்வி எழுப்பினார்கள் என்கிறார் மலாலா.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |