மொத்தமாக உடைத்துப் பேச இளவரசர் ஹரிக்கு உரிமை உண்டு: திடீரென்று குவியும் ஆதரவு
மேகன் மெர்க்கல் வெளிப்படுத்திய சம்பவங்களால் இளவரசர் ஹரி கூறிய நிகழ்வுகள் போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை
ஹரி எப்போதாவது அரச வாழ்க்கைக்குத் திரும்ப விரும்பினால், அவர் வெளியிடும் கருத்தில் கவனமாக இருக்க வேண்டும்
தனது அனுபவங்கள் தொடர்பில் உண்மையை உடைத்துப் பேச இளவரசர் ஹரிக்கு முழு உரிமையும் உண்டு என ராஜகுடும்பம் தொடர்பில் கருத்து வெளியிடும் ஒருவர் தெரிவித்துள்ளார்.
மேலும், பிரித்தானிய ராஜகுடும்பத்தை நடுங்க வைத்த ஓப்ரா வின்ஃப்ரே நிகழ்ச்சி உண்மையில் மேகன் மெர்க்கல் முன்னெடுத்த நிகழ்ச்சி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அந்த நிகழ்ச்சியில் மேகன் மெர்க்கலுக்கு அதிக நேரம் ஒதுக்கப்பட்டிருந்தது என்றும், அவர் பக்க தரவுகளை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
@getty
மேகன் மெர்க்கல் வெளிப்படுத்திய சம்பவங்களால் இளவரசர் ஹரி கூறிய நிகழ்வுகள் போதிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இருப்பினும், இளவரசர் ஹரி கவனமுடன் அடுத்த நகர்வுகளை முன்னெடுக்காமல் போனால், அது அவருக்கு இழப்பை ஏற்படுத்தலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
தனது எண்ண ஓட்டங்களை, அனுபவங்களை வெளிப்படுத்த இளவரசர் ஹரிக்கு முழு உரிமையும் உண்டு என குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் கவனமும் நிதானமும் தேவை என சுட்டிக்காட்டியுள்ளார்.
@getty
ஹரி பல உண்மைகளை வெளிப்படுத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை என குறிப்பிட்டுள்ள அவர், கண்டிப்பாக அந்த புத்தகம் பலரது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்றார்.
மேலும், ஹரி எப்போதாவது அரச வாழ்க்கைக்குத் திரும்ப விரும்பினால், அவர் வெளியிடும் கருத்தில் கவனமாக இருக்க வேண்டும் என்றார்.
நெருப்பு வைக்கப்பட்ட பாலம், ஒருபோதும் கரையைக் கடக்க உதவாது என அவர் இளவரசர் ஹரிக்கு எச்சரிக்கையும் செய்துள்ளார்.