காஸா, உக்ரைன் சிறார்களுக்காக பெருந்தொகை நன்கொடை அளித்த இளவரசர் ஹரி
காஸா மற்றும் உக்ரைனில் போரினால் காயம்பட்ட சிறார்களுக்கு என இளவரசர் ஹரி மற்றும் அவரது மனைவியின் அறக்கட்டளை சார்பில் 500,000 டொலர் நன்கொடை அளிக்கப்பட்டுள்ளது.
அதிக காயம்பட்ட சிறார்கள்
காயம்பட்ட சிறார்களுக்கு செயற்கை உறுப்புகளை உருவாக்க உதவுதல் மற்றும் பிற ஆதரவை வழங்குவதற்காக குறித்த தொகை பயன்படுத்தப்படும். பிரித்தானியாவிற்கு வருகை தந்துள்ள இளவரசர் ஹரி, மூன்றாவது நாளில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எந்த ஒரு அமைப்பும் இதைத் தனியாகத் தீர்க்க முடியாது என தமது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள ஹரி, உலகிலும் வரலாற்றிலும் சரி காஸா தற்போது அதிக காயம்பட்ட சிறார்களின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.
குண்டுவெடிப்பு காயங்களுக்குப் பிறகு சிறார்கள் உயிர்வாழ்வதையும் மீள்வதையும் உறுதி செய்வதற்கு அரசு, அறிவியல், மருத்துவம், மனிதாபிமான நடவடிக்கை மற்றும் ஆதரவு ஆகியவற்றின் கூட்டாண்மை தேவைப்படுகிறது என பதிவு செய்துள்ளார்.
லண்டன் இம்பீரியல் கல்லூரியின் ஒரு பகுதியான CIS தெரிவிக்கையில், குண்டுவெடிப்பு காயங்களால் குழந்தைகள் இறப்பதற்கு பெரியவர்களை விட ஏழு மடங்கு வாய்ப்புகள் அதிகம் என குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில், 500,000 டொலர் நன்கொடை அறிவித்துள்ள இளவரசர் ஹரி, அதில் தமது மனைவி மேகனின் ஆர்க்கிவெல் அறக்கட்டளை, காஸாவில் இருந்து ஜோர்டானுக்கு மருத்துவ சிகிச்சை பெறுவோருக்கு என உதவும் உலக சுகாதார அமைப்புக்கு 200,000 டொலர் தொகையும்,
முன்னாள் படைவீரர்களுக்காக
காஸாவில் தொடர்ந்து மனிதாபிமான ஆதரவை வழங்குவதற்காக சேவ் தி சில்ட்ரன் தொண்டு நிறுவனத்திற்கு 150,000 டொலர் தொகையும் வழங்குகிறது. இன்னொரு 150,000 டொலர் தொகையானது காயமடைந்த குழந்தைகளுக்கு, குறிப்பாக உக்ரைன் மற்றும் காஸாவில் நடந்த மோதல்களால் காயமடைந்தவர்களுக்கு ஆதரவளிக்கக்கூடிய செயற்கை உறுப்புகளை உருவாக்க பயன்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய இராணுவத்தில் 10 ஆண்டுகள் பணியாற்றியுள்ள ஹரி, அந்த காலகட்டத்தில் ஆப்கானிஸ்தானில் இரண்டு முறை சேவை செய்துள்ளார். அதன் பின்னர் முன்னாள் படைவீரர்களுக்காக முன்னுரிமை அளித்து வருகிறார்.
2020 ஆம் ஆண்டு அரச கடமைகளில் இருந்து விலகிய பின்னர், தற்போது குடும்பத்துடன் கலிபோர்னியாவில் வசிக்கும் ஹரி, தற்போதைய பிரித்தானியா வருகையின் போது தொண்டு நிறுவனங்களை பார்வையிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |