பிரித்தானிய மகாராணியாரின் பிறந்தநாளின்போது குடும்பமே அவரை சூழ்ந்திருக்க ஹரி எங்கிருக்கிறார் பாருங்கள்
சமீபத்தில் பிரித்தானியாவுக்கு வந்த பிரித்தானிய இளவரசர் ஹரி ஒரு சர்ச்சையை உருவாக்கினார்.
தன் பாட்டியாரான பிரித்தானிய மகாராணியார் பாதுகாப்பாக இருக்கிறாரா என்பதை உறுதி செய்துகொள்வதற்காக தான் பிரித்தானியா வந்ததாக அவர் கூறிய விடயம், கோபத்தையும் கேலி கிண்டலையும் ஒரு சேர உருவாக்கியது.
முதலில் மகாராணியாரின் அருகிலேயே அவரது மகனும் வருங்கால மன்னருமான இளவரசர் சார்லசும், இளவரசர் வில்லியமும் இருக்கும் நிலையில், மகாராணியாரின் பாதுகாப்பை உறுதி செய்ய விரும்புவதாக ஹரி கூறியது அவர்களுக்கு எரிச்சலை உண்டாக்குவதாக அமைந்தது.
அதேபோல, ஹரி பிரித்தானியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் வாழ்ந்துவரும் நிலையில் அவர் மகாராணியாரின் பாதுகாப்பைக் குறித்து பேசியதால் மக்கள் எரிச்சலடைந்ததோடு, அவரைக் கேலியும் செய்தார்கள். நீங்கள் அமெரிக்காவிலேயே இருங்கள், பிரித்தானியாவுக்கு வராதீர்கள் என்று கூட பிரித்தானியர்கள் கூறியதாக செய்திகள் வெளியாகின.
இதற்கிடையில், மகாராணியாரின் பாதுகாப்பு குறித்து அக்கறை இருப்பதாக கான்பித்துக்கொண்ட ஹரி, நேற்று மகாராணியார் தனது 96ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும்போது அவருடன் இல்லை.
இன்விக்டஸ் விளையாட்டுப் போட்டிகளுக்காக நெதர்லாந்து சென்றிருந்த ஹரி, தனது குடும்பத்தினர் முழுவதும் மகாராணியாரை சூழ்ந்திருக்கும் நேரத்தில், மதுபான விடுதி ஒன்றில் தனது நண்பர்களுடன் குடித்துக்கொண்டிருந்திருக்கிறார்.
அவரது செயல் குறித்து கேலி செய்யும் விதத்தில், ’மகாராணியாரின் பிறந்தநாள் கொண்டாட்டங்களின்போது மதுபான விடுதியில் இருந்த இளவரசர் ஹரி’ என பிரித்தானிய பத்திரிகைகள் எழுதியுள்ளன.
அதிலும் ஒரு பத்திரிகை, முன்பெல்லாம் ஹரி எக்கச்சக்கமாக குடிப்பார். இன்று அவர் நெதர்லாந்து மன்னரை சந்திக்கவேண்டியிருந்ததால் போதையில் மட்டையாகிவிடக்கூடாது என்பதற்காகத்தான் கொஞ்சமாக குடித்தார் என்று எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.