மனைவி மேகன் மார்க்கலை அனுப்பிவிட்டு, முன்னாள் காதலியை சந்தித்த ஹரி!
திருமணத்திற்கு பிறகு மனைவி மேகன் மார்க்கலை அனுப்பிவிட்டு, தனது முன்னாள் காதலியைப் பார்த்து இளவரசர் ஹரி மிக மகிழ்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.
மார்ச் 2020-ல் நடந்த இந்த சம்பவத்தில், மேகன் மார்க்கல் மீண்டும் கனடாவுக்குச் சென்ற பிறகு, இளவரசர் ஹாரி தனது முன்னாள் காதலி செல்சி டேவியை (Chelsy Davy) பார்த்து கட்டி அனைத்து மகிழ்ச்சியடைந்ததாகக் கூறப்படுகிறது.
2020-ல்..,
இளவரசர் ஹரி 2020-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் மகன் ஆர்ச்சி இல்லாமல் காமன்வெல்த் தினத்திற்காக மேகனுடன் வெஸ்ட்மின்ஸ்டர் அபேக்கு சென்றார்.
 Getty Images
Getty Images
பின்னர், மேகன் மார்க்கல் ஆர்ச்சியுடன் மீண்டும் இணைவதற்காக கனடா திரும்பினார், ஆனால், ஹரி இன்னும் சில நாட்கள் இங்கிலாந்தில் தங்கியிருந்தார்.
அப்போது இளவரசர் ஹரியின் நண்பர்கள், அவர் கனடாவுக்குத் திரும்புவதற்கு முன்பு அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தனர்.
முன்னாள் காதலி
இந்த விருந்தில் ஹரியின் முன்னாள் காதலி செல்சியும் கலந்து கொண்டார்.
விருந்தில் செல்சியைப் பார்த்து ஆச்சரியமடைந்த இளவரசர் ஹரி, மேலும் அவர் அவளை இறுக்கமாக கட்டி அரவணைத்தாகக் கூறப்படுகிறது.
 Getty Images
Getty Images
அவரை அங்கு சந்தித்ததில் ஹரி மிகவும் மகிழ்ச்சி அடைந்ததாகவும், இருவருக்கும் இடையில் தீவிரமான தொடர்பு இருப்பதை வெளிப்படுத்தியதாகவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இளவரசர் ஹரி மற்றும் செல்சி 2004 மற்றும் 2011-க்கு இடையில் டேட்டிங் செய்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        