பிரித்தானியாவின் அடுத்த மன்னர் இளவரசர் ஹரியா? நாஸ்ட்ரடாமஸின் கணிப்பு
இரண்டாம் எலிசபெத் மகாராணியாருக்குப் பின் மன்னராகியுள்ளார் சார்லஸ். அவருக்குப் பின், இளவரசர் வில்லியம் மன்னராகவேண்டும்.
வில்லியமுக்குப் பின், அவரது மகனான குட்டி இளவரசர் ஜார்ஜ் மன்னராவார். ஆக, ராஜ குடும்ப மரபுப்படி மன்னர் சார்லசுடைய இளைய மகனான இளவரசர் ஹரியால் அரியணையேறவே முடியாது.
ஆனால், இளவரசர் ஹரி அரியணையேற வாய்ப்புள்ளது என ஜோதிட நிபுணரான நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளதாக கூறுகிறார் ஒருவர்!
எதிர்பாராத திருப்பம் நேரிடலாம்...
பிரெஞ்சு ஜோதிடக்கலை நிபுணரான நாஸ்ட்ரடாமஸின் புத்தகங்களுக்கு விளக்கமளிக்கும் நிபுணரான Mario Reading என்பவர், தனது புத்தகமொன்றில் நாஸ்ட்ரடாமஸ் பிரித்தானிய ராஜ குடும்பம் குறித்து கணித்துள்ள சில விடயங்களுக்கு விளக்கமளித்துள்ளார்.
அந்த புத்தகம், 2022ஆம் ஆண்டு எலிசபெத் மகாராணியார் இயற்கை எய்துவார் என மிகச்சரியாக கணித்திருந்தது.
இந்நிலையில், மன்னர் சார்லஸ் தனது மனைவியான டயானாவை விவாகரத்து செய்ததால் இன்னமும் மக்களில் சிலர் அவர் மீது வெறுப்பு வைத்துள்ளதாகவும், அதன் காரணமாகவும், தனது வயது காரணமாகவும், அவர் தனது மன்னர் பதவியைத் துறப்பார் என நாஸ்ட்ரடாமஸின் புத்தகங்களுக்கு விளக்கமளிக்கும் நிபுணரான Mario Reading தெரிவித்துள்ளார்.
மேலும், மன்னர் சார்லசுக்குப் பின் இளவரசர் வில்லியம்தான் அரியணையேறவேண்டும். ஆனால், மன்னராவார் என யாரும் எதிர்பார்க்காத ஒருவர் பிரித்தானிய மன்னராவார் என நாஸ்ட்ரடாமஸ் கணித்துள்ளதாகக் கூறும் Mario Reading, அது இளவரசர் ஹரியாக இருக்கலாம் என்கிறார்.
இதற்கிடையில், தன்னை மன்னர் சார்லசுடைய ரகசிய மகன் என கூறிக்கொள்ளும் அவுஸ்திரேலியரான சைமன் (Simon Dorante-Day) என்பவரும், நாஸ்ட்ரடாமஸின் கணிப்புப்படி, சார்லசுக்குப் பின் மன்னராகப்போவது தானாகக்கூட இருக்கலாம் என கூறியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |