இளவரசர் ஹரிக்கு தந்தையின் முடிசூட்டுவிழாவில் பத்தாவது வரிசையில் இடம்: சமீபத்திய தகவல்
மன்னர் சார்லசுடைய முடிசூட்டுவிழாவிற்கு ஹரி வருவாரா என்பது குறித்த செய்திகள் தொடர்ந்து வெளியான நிலையில், தற்போது, அவர் விழாவிற்கு வருவது உறுதியாகியுள்ளது.
பத்தாவது வரிசையில் ஹரிக்கு இடம்
இளவரசர் ஹரி, முடிசூட்டுவிழா நிகழ்ச்சியில் பத்தாவது வரிசையில்தான் அமரப்போகிறார் என்று கூறியுள்ளார், இளவரசி டயானாவின் பட்லரான பால் பர்ரல்.
Image: Ken McKay/ITV/REX/Shutterstock
ஹரி, தன் தந்தை அழைத்தார் என்பதற்காக மட்டுமே அவரது முடிசூட்டுவிழாவிற்கு வரப்போகிறார் என்று கூறும் பால், அவர் பத்தாவது வரிசையில் அமருவார். சீக்கிரமாகவே புறப்பட்டும் விடுவார் என்கிறார்.
Image: Getty Images
அதனால், அவர் தன் அண்ணன் வில்லியமை சந்திக்கக்கூட அவருக்கு நேரம் கிடைக்கப்போவதில்லை, அத்துடன், அவர் மின்னல் போல வந்துவிட்டுச் செல்ல இருக்கும் நிலையில், தனக்கு பத்தாவது வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து அவர் கவலைப்படவும் போவதில்லை என்கிறார் பால்.
வீடியோவை காண
Image: Getty Images