இளவரசர் ஹரி மேகனை விட்டு பிரிவார்; மன்னர் சார்லஸ் எதிர்பாராத முடிவை எடுப்பார்: குறி சொல்லும் பிரித்தானியர்
இளவரசர் ஹரி மேகன் மார்க்கலை விட்டு பிரிந்து பிரித்தானியாவிற்கு வருவார்..,
மன்னர் மூன்றாம் சார்லஸ் தனது பதவியை துறந்து இளவரசர் வில்லியமை மன்னராக அறிவிப்பார்.
இளவரசர் ஹரி, மனைவி மேகன் மார்க்கலை விட்டு பிரிந்து மீண்டும் அரச குடும்பத்திற்கு வருவார் என பிரித்தானிய குறிசொல்லி கணித்துள்ளதாக கூறியுள்ளார்.
மனோதத்துவ நிபுணர் (Psychic) என கூறப்படும் ஜான் ஹியூஸ் (John Hughes), பர்மிங்காம் லைவில் அரச குடும்பம் குறித்து கணித்துவருவதாக கூறுகிறார். மன்னர் மூன்றாம் சார்லஸ் இறப்பதற்கு முன்பே பதவி விலகுவதற்கான முடிவை எடுப்பார் என்று கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், பிரித்தானியாவில் "மீண்டும் ஒரு அரசு இறுதிச் சடங்கில் மில்லியன் கணக்கான பவுண்டுகளை வீணாக்க விரும்பவில்லை என்ற எளிய காரணத்திற்காக மன்னர் மூன்றாம் சார்லஸ் அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் பதவி விலக விரும்புகிறார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் மேகனும் ஹரியும் பிரிவார்கள், அங்கே ஏதோ நடப்பதை நான் காண்கிறேன்.
ஹரி மீண்டும் பிரித்தானியாவிற்கு தனது அரச கடமைகளை ஏற்க வருவதை நான் காண்கிறேன். அது நிகழும்போது, சார்லஸ் அரச குடும்பத்திற்குள் ஹரியின் பதவியைத் தேர்ந்தெடுப்பார்" என்று கூறுகிறார்.
அவர் மேலும் கூறியதாவது: “அடுத்த ஏழு ஆண்டுகளுக்குள் வில்லியம் அந்தப் பொறுப்பை ஏற்பார்..,
சார்லஸ் தனது தாயை போல் மன்னராக பெரும் கடமைகளை நிறைவேற்ற முடியாது என்று புரிந்துகொள்வார். அது மிகவும் பெரிய வேலை என்பதால், அவர் அரச குடும்பத்தை மறுசீரமைப்பார் மற்றும் ஒரு இளம் மன்னரை வைப்பார்" என்று ஜான் ஹியூஸ் கூறியுள்ளார்.
James Whatling/MEGA.