பொறுப்பை விட்டுச் சென்ற ஹரி... தாத்தா வழியில் மன்னராக தயாராகும் வில்லியம்
ராஜ குடும்ப மூத்த உறுப்பினர் என்னும் உயரிய கௌரவத்தின் அருமை புரியாமல், தன் மனைவிக்கான அதை விட்டுச் சென்ற இளவரசர் ஹரி இப்போது கஷ்டப்பட்டுக்கொண்டிருக்கிறார்.

ஆனால், இளவரசர் வில்லியமோ, தந்தை நோய்வாய்ப்பட்ட நிலையில், அவருடன் தோளோடு தோளாக நின்று கடமையாற்றிவருகிறார்.
தாத்தாவைப் பின்பற்றி...
மன்னராக தயாராகிவரும் இளவரசர் வில்லியம், ஒழுக்கம், கட்டுப்பாடு என தன் தாத்தாவான இளவரசர் பிலிப்பைப் பின்பற்றி நடந்துவருவதாகத் தெரிவிக்கிறார் ராஜ குடும்ப நிபுணரான ஜென்னி பாண்ட் என்பவர்.

மறைந்த மகாராணியாரின் கணவரான இளவரசர் பிலிப், தன் குடும்பத்தைக் கட்டுப்பாடாக வைத்திருந்தார். குடும்பத்தின் ஒழுக்கம் குலைந்ததும், அவர் இறந்தே போனார் என்று கூறும் ஜென்னி, வில்லியமும் தன் தாத்தாவைப்போலவே குடும்பத்தை கட்டுப்பாடாக வைத்துக்கொண்டிருப்பதாக தெரிவிக்கிறார்.

வில்லியம் எப்போதுமே உறுதியான ஒரு மனிதர் என்று கூறும் ஜென்னி, அரியணையேறும் வாரிசு என்னும் முறையில், அவரது சொல்லுக்கு குடும்பத்தில் பெரிய அளவில் மரியாதை இருக்கிறது, ஆகவே, இளவரசர் ஹரி மற்றும் ஆண்ட்ரூ விடயத்திலும் அவர் உறுதியான முடிவெடுக்க அவர் தயாராக இருப்பதாகவே தெரிகிறது என்கிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |