மேகனை காதலிக்கும் போதே வேறு பெண்ணுடன் தொடர்பில் இருந்த ஹரி! அந்த பெண் யார்? புகைப்படம்
மேகனுடன் காதலில் இருக்கும் போதே வேறு ஒரு பெண்ணுடன் டேட்டிங் சென்ற ஹரி.
எழுத்தாளர் Angela Levin எழுதியுள்ள ஹரியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகத்தில் தகவல்.
மேகன் மெர்க்கலுடன் காதலில் இருந்த போதே இளவரசர் ஹரி வேறு ஒரு பெண்ணுடன் டேட்டிங் செய்தார் என கூறப்படுகிறது.
எழுத்தாளர் Angela Levin எழுதியுள்ள ஹரியின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புத்தகத்தில் தான் இது குறித்த தகவல்கள் இடம்பிடித்துள்ளன. அதன்படி மொடலான சாரா அன் மெக்லின் என்ற பெண்ணுடன் தான் ஹரி முன்னர் டேட்டிங் சென்றிருக்கிறார் என தெரியவந்துள்ளது.
மேகனுடன் காதலில் இருந்த ஆரம்ப காலக்கட்டத்தில் ஹரி சாராவை ஒரு விருந்தில் சந்தித்த நிலையில் இருவரும் நட்பாகியுள்ளனர். பின்னர் சாராவுடன் ஹரி டேட்டிங் சென்றதாக கருதப்பட்டதாக Levin தெரிவித்துள்ளார்.
சாராவின் செல்போன் நம்பரை வாங்கி அவருக்கு அதிக மெசேஜ்களும் ஹரி அனுப்பியிருக்கிறார். ஆனால் குறுகிய காலத்தில் அவர்களின் தொடர்பு முறிந்திருக்கிறது.
ndtv
சாரா அன் மெக்லின் என்பவர் யார்?
ஹரியும் - மேகனும் அமெரிக்காவில் இரண்டு குழந்தைகளுடன் வசிக்கும் நிலையில் சாரா தனது மொடலிங் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் பணியை தொடர்ந்து செய்து வருகிறார்.
மேலும் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான உதவிக்குறிப்புகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகிறார்.
marca