பிள்ளைகளை பிரித்தானியா அழைத்துவர ஏங்கும் இளவரசர் ஹரி: நண்பர்கள் கூறும் காரணம்
அமெரிக்காவில் வாழும் பிரித்தானிய இளவரசர் ஹரி, தன் பிள்ளைகளை பிரித்தானியாவுக்கு அழைத்துவர ஏங்குவதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
பிள்ளைகளை பிரித்தானியா அழைத்துவர விருப்பம்
பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் என்னும் அமெரிக்கப் பெண்ணை திருமணம் செய்து ராஜகுடும்பத்துக்குள் கொண்டுவர, அந்தப் பெண்ணால் ராஜ குடும்ப மரபுகளுக்குக் கட்டுப்பட்டு நடக்க முடியாமல் குடும்பத்துக்குள் பிரச்சினைகள் வெடிக்க, வேறு வழியில்லாமல் ராஜ குடும்பத்தைவிட்டு வெளியேறினார் ஹரி.
Getty Images
தனது குடும்பத்துடன் ஹரி அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடியமர்ந்துள்ள நிலையில், தனது பிள்ளைகளான ஆர்ச்சியையும் லிலிபெட்டையும் தன் தாய்நாடான பிரித்தானியாவுக்கு அழைத்துவர அவர் ஏங்குவதாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானியாவுக்கு தன் பிள்ளைகளை அழைத்துவந்து, தான் வளர்ந்த இடங்களை அவர்களுக்குக் காட்ட ஹரி விரும்புவதாக அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
அத்துடன், பிரித்தானியாவிலிருக்கும் தங்கள் குடும்பத்தை தன் பிள்ளைகள் அறிந்துகொள்ளவேண்டும் என்று ஹரி விரும்புவதாகவும் அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளார்கள்.
இன்று, WellChild Awards என்னும் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சிக்காக பிரித்தானியா வருகிறார் ஹரி. ஆனால், அவருடன் அவரது பிள்ளைகள் வருவதாக திட்டம் இல்லை
. ஆக, விரைவில் ஹரி தன் பிள்ளைகளுடன் மீண்டும் பிரித்தானியா வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Getty Images