இளவரசர் ஹரியின் புத்தகத்தால் என் உயிருக்கு ஆபத்து: பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நபர்
இளவரசர் ஹரி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள ஒரு விடயத்தால், அவருக்கும் தனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் ஒருவர்.
இவர் யார் தெரியுமா?
புகைப்படத்தில் பார்த்தால் அச்சு அசலாக காணப்படும் இந்த நபருடைய பெயர் Rhys Whittock.
Rhys எங்குபோனாலும், அவரை ஹரி என்றே நினைத்து அவருடன் பேச முற்படுவோர் பலர்.
ஹரியைப்பொலவே தோற்றமளிப்பவர் யார் என்னும் ஒரு போட்டியில் பங்கேற்றபோது, 3,000 பேரில் அச்சு அசலாக ஹரியைப்போலவே இருப்பவர் என நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் இந்த Rhys.
Image: Matt Alexander/PA Wire
ஹரியின் புத்தகத்தால் உயிருக்கு ஆபத்து
ஹரி எழுதியுள்ள சுயசரிதைப் புத்தகமாகிய Spare, அவர் ஆப்கானிஸ்தானில் 25 தாலிபான்களைக் கொன்றுள்ளதாக தெரிவிக்கிறதாம்.
தனது புத்தகத்தை விளம்பரப்படுத்தும் நோக்கில் அவரே இந்த விடயத்தைக் குறித்து பேசியும் உள்ளார். ஆனால், அது எதிர்பாராத எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. அதாவது, தாலிபான்களை அந்த விடயம் கோபப்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஹரி தாலிபான்கள் குறித்து தெரிவித்த கருத்து, அவரது உயிருக்கும் தனது உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கிறார் Rhys.
தனது தாயார் தனக்கு அனுப்பிய குறுஞ்செய்தி ஒன்றில், ஹரி தாலிபான்கள் குறித்து தெரிவித்த விடயத்தால் அவரை அவர்கள் குறிவைப்பார்கள், நீயும் இனி வெளியே செல்லும்போது குளிர் கண்ணாடி அணிந்து வெளியே செல், அதாவது கவனமாக இருந்துகொள் என குறிப்பிட்டுள்ளதாகவும், அதைக் கேட்டு தான் அச்சமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார் Rhys.
Image: Getty Images