இளவரசர் ஹரி அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்பட்டால் இந்த நாட்டில் குடியேறலாம்
ராஜ குடும்பத்திலிருந்தும் பிரித்தானியாவிலிருந்தும் வெளியேறிய இளவரசர் ஹரி, தற்போது அமெரிக்காவில் தன் மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்துவருகிறார். ஆனால், தவளை தன் வாயால் கெடும் என்பதுபோல, அவர் தனது புத்தகத்தில் குறிப்பிட்ட சில விடயங்களால் அவர் அமெரிக்காவைவிட்டு வெளியேற்றப்படும் ஒரு அபாயம் உள்ளது.
விசா விண்ணப்பத்தில் மறைக்கப்பட்ட உண்மை?
அதாவது, தனது சுயசரிதை புத்தகமாகிய ’ஸ்பேர்’ புத்தகத்தில், தான் கஞ்சா, கொக்கைன் முதலான பல்வேறு போதைப்பொருட்களை பரிசோதித்துப் பார்த்ததாகக் குறிப்பிட்டிருந்தார் ஹரி.
ஆனால், அமெரிக்காவுக்கான விசா விண்ணப்பித்திலும், அதற்குப் பின்வரும் நேர்காணல்களிலும், சட்டவிரோத போதைப்பொருட்கள் வைத்திருக்கும், பயன்படுத்தும் அல்லது விநியோகிக்கும் விடயத்தில், எப்போதாவது, ஏதாவது சட்டத்தை மீறியிருக்கிறீர்களா என்ற கேள்வி இடம்பெற்றிருக்கும்.
Image: Photo by Karwai Tang/WireImage
அதற்கு, ’ஆம்’ என பதிலளிக்கும் பட்சத்தில், அந்த நபருடைய விண்ணப்பம் பொதுவாக நிராகரிக்கப்படும். அப்படியிருக்கும் நிலையில், தான் போதைப்பொருள் பயன்படுத்தியதாக தனது புத்தகத்தில் தெரிவித்திருக்கும் ஹரி, விசா விண்ணப்பத்தில் பொய் சொன்னாரா என்ற கேள்வி எழுந்தது.
ஹரி, விசா தொடர்பான ஆவணங்களில் பொய் சொன்னாரா என்பதை அறிவதற்காக Heritage Foundation என்னும் அமைப்பு, ஹரியின் புலம்பெயர்தல் ஆவணங்களைப் பார்வையிடக் கோரி முறையீடு செய்திருந்தது. ஆக, ஹரி பொய் சொல்லியதாக தெரியவந்தால், அவர் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படலாம்.
அடுத்து என்ன?
தற்போது அமெரிக்காவை ஆளும் ஜோ பைடன் நிர்வாகம் ஹரிக்கு ஆதரவாக உள்ளது. ஆனால், அடுத்த தேர்தலில் ஒருவேளை ட்ரம்ப் வெற்றிபெறுவாரானால், சூழ்நிலை மாறக்கூடும்.
இந்நிலையில், இந்த விடயம் குறித்து ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ராஜ குடும்ப ஊடகவியலாளரான Jennie Bond என்பவர், அமெரிக்கா ஹரியை வெளியே துரத்திவிடும் என்று கூறமுடியாது, ஆனால், அவருக்கு அது அசௌகரியமான ஒரு சூழலை உருவாக்கலாம்.
அப்படி ஒரு சூழ்நிலை உருவாகுமானால், ஹரி தன் குடும்பத்துடன் அமெரிக்காவைவிட்டு வெளியேறலாம். அவர் பிரித்தானியாவுக்கு மீண்டும் திரும்புவது சந்தேகமே. ஆகவே, கனடா அவருக்கு இடம் கொடுக்கக்கூடும் என்கிறார் Jennie Bond.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |