இளவரசர் ஹரியின் அடுத்த குறி இவர் தான்: அம்பலப்படுத்திய டயானாவின் முன்னாள் ஊழியர்
பிரித்தானிய இளவரசர் ஹரியின் வெளிவரவிருக்கும் புத்தகத்தில் அவரது முக்கிய இலக்கு யார் என்பதை இளவரசி டயானாவின் முன்னாள் முதன்மை ஊழியர் ஒருவர் அம்பலப்படுத்தியுள்ளார்.
இளவரசர் ஹரி முக்கிய நிறுவனம் வெளியிட நான்கு புத்தகங்களை தமது நினைவுக் குறிப்பாக தொகுக்க உள்ளார். இந்த நிலையில், அவரது வெளிவரவிருக்கும் புத்தகத்தில் இளவரசர் சார்லசின் மனைவி கமிலா பார்க்கர் தொடர்பில் முக்கிய தகவல்கள் அம்பலப்படுத்தப்படலாம என மறைந்த இளவரசி டயானாவின் முதன்மை ஊழியர் Paul Burrell சுட்டிக்காட்டியுள்ளார்.
தமது தாயாரின் மறைவு, அதன் பின்னர் நடந்த நிகழ்வுகள் அனைத்தும் அந்த புத்தகத்தில் இளவரசர் ஹரி ஒளிவு மறைவின்றி வெளிப்படுத்துவார் என்பதில் சந்தேகம் இல்லை என குறிப்பிட்டுள்ள Paul Burrell, டயானாவின் இடத்தில் தற்போது இருக்கும் கமிலா பார்க்கர் தொடர்பில் முக்கிய ரகசியங்களை கண்டிப்பாக ஹரி அம்பலப்படுத்துவார் என தாம் ஆழமாக நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு ரகசியங்கள் அம்பலமானால், 72 வயதாகும் இளவரசர் சார்லஸ் கொதிப்படைவது உறுதி என்றார். சார்லஸ் மற்றும் டயானா திருமணத்திற்கு ஒருவகையில் கமிலா பார்க்கர் காரணமானதாக கூறப்படும் நிலையில், தற்போது டயானாவின் இடத்தில் சார்லஸின் மனைவியாக வலம்வரும் கமிலாவே இளவரசர் ஹரியின் இலக்கு என தாம் நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனாலையே, ஹரியின் புதிய புத்தகத்தில் கமிலா தொடர்பிலான ரகசியங்கள் இருக்க வாய்ப்புள்ளதாக Paul Burrell கூறுகிறார்.