வெளிநாடொன்றில் ‘Golden Visa’ வாங்க முயற்சிக்கும் ஹரி மேகன் தம்பதி
பிரித்தானியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்த பிரித்தானிய இளவரசர் ஹரியின் குடும்பம், தற்போது ஐரோப்பிய நாடொன்றில் வீடொன்றை வாங்கியுள்ள விடயம் கவனம் ஈர்த்துள்ளது.
‘Golden Visa’ வாங்க முயற்சிக்கும் ஹரி மேகன் தம்பதி
பிரித்தானியாவை விட்டு வெளியேறி அமெரிக்காவில் குடிபெயர்ந்த பிரித்தானிய இளவரசர் ஹரி மேகன் தம்பதியர், தற்போது போர்ச்சுகல் நாட்டில் வீடொன்றை வாங்கியுள்ளார்கள்.
இந்நிலையில், அவர்கள் போர்ச்சுகல்லில் ‘Golden Visa’ வாங்க முயற்சிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கணவனும் மனைவியுமாக சமீபத்தில் ஜாலியாக போர்ச்சுகல்லுக்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில், அவர்களுக்கு இந்த திட்டம் உருவாகியிருக்கலாம் என கருதப்படுகிறது.
அத்துடன், ஹரியின் சித்தப்பா மகளான இளவரசி யூஜீனி மற்றும் அவரது கணவரான ஜாக்குக்கும் (Jack Brooksbank) போர்ச்சுகல் நாட்டில் வீடு ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |