அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நேரத்தில் இளவரசர் ஹரிக்கு வந்த பெரும் செலவு
இளவரசர் ஹரி, பெரும் தொகை ஒன்றை சொத்துவரியாக கட்டவேண்டும் என உள்ளூர் அரசாங்கம் தெரிவித்துள்ளதாக பிரித்தானிய ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
பிறந்தநாளில் ஹரிக்கு கிடைக்கும் பெரும் தொகை
இம்மாதம், அதாவது, செப்டம்பர் மாதம் 15ஆம் திகதி, இளவரசர் ஹரி தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாட இருக்கிறார்.
Image: Google
இளவரசர் ஹரியின் பாட்டியாகிய இரண்டாம் எலிசபெத் மகாராணியாரின் தாயாகிய முதலாம் எலிசபெத், தன் பேரப்பிள்ளைகளுக்காக அறக்கட்டளை ஒன்றை உருவாக்கிவைத்துச் சென்றுள்ளார்.
அவரது பேரப்பிள்ளைகளில் சிலருக்கு 21 வயதாகும்போது அந்த அறக்கட்டளையிலிருந்து ஒரு பெரிய தொகை வழங்கப்படும்.
அவர்களுக்கு 40 வயதாகும்போது, மீண்டும் ஒரு பெரிய தொகை அந்த அறக்கட்டளையிலிருந்து வழங்கப்படும்.
Image: (Image: UK Press/Getty Images
அவ்வகையில், இளவரசர் ஹரி, வரும் ஞாயிற்றுக்கிழமை தனது 40ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், தனது பூட்டியாரான முதலாம் எலிசபெத்தின் அறக்கட்டளையிலிருந்து அவருக்கு 7 மில்லியன் பவுண்டுகள் வழங்கப்பட உள்ளன.
அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நேரத்தில் வந்த செலவு
Image: Getty Images
இந்நிலையில், பூட்டியாரின் அறக்கட்டளையிலிருந்து பணம் கிடைக்கும் முன்பே, ஹரி தான் தன் குடும்பத்துடன் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வாழும் வீட்டுக்கு சொத்துவரி செலுத்தவேண்டும் என உள்ளூர் அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்கள்.
9 படுக்கையறைகள் கொண்ட அந்த பிரம்மாண்ட வீட்டுக்கான சொத்துவரி, இந்த ஆண்டுக்கு மட்டும் சுமார் 100,000 பவுண்டுகள்!
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |