இளவரசர் வில்லியம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்: ஹரி மேகனால் ஆபத்து
ஹரி, மேகன் தம்பதியரால் ஆபத்து ஏற்படலாம் என்றும், அதனால், இளவரசர் வில்லியம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
இளவரசர் வில்லியம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்
இளவரசர் வில்லியம், நவயுக மன்னராட்சியில் தனது பங்களிப்பு குறித்து குறிப்பிடும்போது, தான் எளிமையாக இருக்க விரும்புவதாகவும், தனது ஆட்சி மக்களின் உணர்வைப் புரிந்துகொண்டு, மக்களுக்கு உதவும் வகையில் அமைந்திருக்கும் என்று சமீபத்தில் தெரிவித்திருந்தார்.
ஆனால், மன்னரும் எளிமையாக நடந்துகொள்ளும் நிலையில், மக்களை கவர்ந்திழுக்கும் இளவரசி கேட்டும் இல்லாமல், மன்னராட்சியில் ஒரு வெற்றிடம் நிலவுவதாகத் தெரிவித்துள்ளார் ராஜ குடும்ப நிபுணரான Dr Tessa Dunlop.
ஆக, இந்த சூழ்நிலையை பயன்படுத்திகொள்ள இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் காத்திருப்பதாக தெரிவிக்கிறார் அவர்.
அதாவது, மக்களுக்கு எப்போதுமே வெறும் சேவைகள் மட்டும் போதாது ஒரு கவர்ச்சியும் வேண்டும் என்று கூறும் Dr Tessa, ஏற்கனவே அப்படிப்பட்ட விடயங்களை ஹரியும் மேகனும் செய்துவருவதாகத் தெரிவிக்கிறார்.
எக்கசக்கமான கவர்ச்சியுடன், தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து செயலாற்றிவரும் ஹரியும் மேகனும், ட்ரம்ப் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் அமெரிக்காவிலிருந்து வெளியேற்றப்படும் அபாயம் உருவாகியுள்ள நிலையில், பிரித்தானியாவில் மன்னராட்சியில் நிலவும் வெற்றிடத்தை பயன்படுத்திக்கொள்ள முயற்சி செய்யலாம் என்கிறார் Dr Tessa.
ஆகவே, மேகன் தம்பதியரால் ஆபத்து ஏற்படலாம் என்றும், அதனால், இளவரசர் வில்லியம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார் Dr Tessa.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |