மேகன் நடித்த ஆபாசக் காட்சிகளை இணையத்தில் தேடிய இளவரசர் ஹரி: அரண்மனை எடுத்த நடவடிக்கை
இளவரசர் ஹரி வெளியிட்டுள்ள தனது Spare என்னும் புத்தகத்தில், தனது மனைவி மேகன் தொலைக்காட்சித் தொடரில் நடித்த ஆபாசக் காட்சிகளை தான் கூகுளில் தேடியதாக தெரிவித்துள்ளார்.
மேகன் சக நடிகருடன் நெருக்கமாக நடித்த காட்சிகள்
இளவரசர் ஹரியைத் திருமணம் செய்யும் முன்பு, Suits என்னும் தொலைக்காட்சித் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் மேகன்.
அந்த தொடரில், தன்னுடன் பணியாற்றும் ஒருவருடன் நெருக்கமாக பழகுவார் மேகன். ஆகவே, அந்தத் தொடரில் அவரும் அவரது சக நடிகர் ஒருவரும் நெருக்கமாக இருக்கும் காட்சிகள் பல இடம்பெற்றிருந்தன.

Image: Karwai Tang/WireImage
மேகனைத் திருமணம் செய்ய முடிவு செய்த ஹரி, மேகன் நடித்த ஆபாசக் காட்சிகளை கூகுளில் தேடினாராம். ஆனால், அவற்றைப் பார்த்தபின், ஏன்தான் அந்தக் காட்சிகளைப் பார்த்தோமோ என்று ஆகிவிட்டதாம் அவருக்கு. அந்த காட்சிகளை தன் மனதில் இருந்து அழிக்க மின்சார ஷாக் சிகிச்சை தேவை என தான் எண்ணியதாக தனது புத்தகத்தில் வேடிக்கையாக குறிப்பிட்டுள்ளார் ஹரி.
கென்சிங்டன் அரண்மனை எடுத்த நடவடிக்கை
இதற்கிடையில், ஹரி மேகன் காதல் விடயம் வெளியானதும், Suits தொடரில் மேகன் இனி எப்படி நடிக்கலாம், என்னென்ன வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் என்பதை அரண்மனை வட்டாரம் கட்டுப்படுத்தத் துவங்கியதாம்.
லாஸ் ஏஞ்சல்ஸில் படமாக்கப்படும் Suits தொடரின் கதாசிரியர் எழுதும் வசனங்கள் லண்டனிலுள்ள கென்சிங்டன் அரண்மனைக்கு அனுப்பப்பட்டு, அதில் பொருத்தமாக இருக்காது என கருதப்படும் வார்த்தைகள் அகற்றப்பட்டு, அரண்மனை அங்கீகரித்தபின்னரே மீண்டும் அவை அமெரிக்காவுக்கு அனுப்பிவைக்கப்பட்டு படமாக்கப்பட்டதாம்.

Image: NBC

Image: NBC

Image: Screengrab/Dave