100 கோடிக்கு மேல் நிதி திரட்டிய ஹரி - மேகன்! ஆனால் செலவு செய்த பணம் குறைவு என குற்றச்சாட்டு
இளவரசர் ஹரியும், மேகனும் ஆர்க்கிவெல் அறக்கட்டளை செயல்பாட்டிற்கு திரட்டிய பணத்தில் சிறிய பங்கை தான் நன்கொடையாக அளித்து செலவழித்ததாக விமர்சனம் எழுந்துள்ளது.
திரட்டப்பட்ட நிதி
அதன்படி திரட்டப்பட்ட பணத்திற்கும் அவர்கள் செலவு செய்த பணத்திற்கும் இடையே உள்ள இடைவெளி மிகவும் அதிகமாக இருப்பதாக விமர்சகர்கள் குற்றம் சாட்டியுள்ளதாக Independent uk பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது.
2020 - 2022 காலக்கட்டத்தில் தடுப்பூசிகள், மீள்குடியேற்றம் போன்ற தொண்டு பணிகளுக்கான நன்கொடைகள் மானியமாக வந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹரி - மேகன் தம்பதியின் ஆதரவாளர்கள் அவர்கள் செய்த நன்கொடைகளுக்காக அவர்களைப் பாராட்டினர்.
thenews
$3 மில்லியன்
அதே நேரம் மொத்தமாக $13 மில்லியன் பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அதில் $3 மில்லியன் மட்டுமே செலவு செய்யப்பட்டதாகவும் விமர்சகர்கள் கூறியதாக Independent uk தெரிவித்துள்ளது.