பிரித்தானிய இளவரசர் ஹரி, மேகன் எடுத்துள்ள திடீர் முடிவு
Prince Harry and Meghan Markle to take break from public life: இளவரசர் ஹரியும் மேகனும், பொதுவாழ்க்கையிலிருந்து சற்று விலகியிருக்க முடிவு செய்துள்ளார்கள்.
பிரித்தானியா திரும்பியதிலிருந்தே பரபரப்பாக செயல்பட்டுவந்த இளவரசர் ஹரியும் மேகனும், திடீர் முடிவொன்றை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரி, மேகன் எடுத்துள்ள திடீர் முடிவு
இளவரசர் ஹரியும் அவரது மனைவியான மேகனும், பொதுவாழ்க்கையிலிருந்து சற்று விலகியிருக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்வதற்காக நாட்டிங்காம் சென்றிருந்த ஹரி, மேகன் தம்பதியருக்கு, யாரும் எதிர்பாராதவகையில் பெரும் வரவேற்பு கிடைத்தது.
விடயம் என்னவென்றால், அதே நாளில் மன்னர் சார்லஸ், வேல்ஸ் நாடாளுமன்றத்தைத் துவக்கிவைக்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அதைத் தொடர்ந்து, ஹரி, மேகன் தம்பதியர் மீது சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

இந்நிலையில்தான், ஹரியும் அவரது மனைவி மேகனும், பொதுவாழ்க்கையிலிருந்து சற்று விலகியிருக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், தன் தந்தை அல்லது சகோதரர் செய்யும் எந்த விடயத்திலிருந்தும் கவனத்தை திருப்புவதற்காக ஹரி எதையும் செய்வதில்லை என ஹரி, மேகன் தம்பதியருக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.