4 ஆண்டுகளுக்குப் பின் பிரித்தானியா வரும் ஹரி மேகன் தம்பதியர்: சில தகவல்கள்
பிரித்தானிய மன்னர் சார்லசின் இளைய மகனான ஹரி, அடுத்த மாதம் பிரித்தானியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஹரி மேகன் தம்பதியர், தங்கள் பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டையும் தங்களுடன் அழைத்துவருகிறார்கள் என்பது கூடுதல் தகவல்!
பிரித்தானியா வரும் ஹரி மேகன் தம்பதியர்
ஹரி மேகன் தம்பதியர், 2020ஆம் ஆண்டு, ராஜ குடும்பத்தை விட்டும், பிரித்தானியாவை விட்டும் வெளியேறி அமெரிக்காவில் சென்று குடியமர்ந்துள்ள நிலையில், அபூர்வமாகவே அவர்கள் பிரித்தானியாவுக்கு வருகை புரிகிறார்கள்.

இதற்கு முன், 2022ஆம் ஆண்டு, எலிசபெத் மகாராணியாரின் பிளாட்டினம் ஜூபிலி கொண்டாட்டங்களின்போது ஹரி குடும்பம் பிரித்தானியாவுக்கு வந்திருந்தது.
ஆக, தன் பேரப்பிள்ளைகளான ஆர்ச்சி மற்றும் லிலிபெட்டைக் காண மன்னர் சார்லஸ் ஆவலுடன் காத்திருக்கிறார்.
சில தகவல்கள்
இந்நிலையில், ஹரி குடும்பம் பிரித்தானியா வருவது தொடர்பில் சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது, ஹரி குடும்பம், பாதுகாப்பு மிக்க ராஜ குடும்பத்துக்குச் சொந்தமான மாளிகை ஒன்றில் தங்கவைக்கப்பட உள்ளார்கள்.
ஹரி தன் பிள்ளைகளுடன் மன்னரை சந்தித்தாலும், அந்த சந்திப்பின்போது மேகன் உடன் இருக்கமாட்டார் என கூறப்படுகிறது.
அதேபோல, ஹரியை இளவரசர் வில்லியம் சந்திக்கமாட்டார் என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இந்த சந்திப்பாவது ராஜ குடும்பத்துக்கும் ஹரி மேகன் தம்பதியருக்கும் இடையில் உள்ள பிளவு நீங்க காரணமாக அமையுமா என்பதை அறிய ராஜ குடும்ப ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |