அமெரிக்காவில் இளவரசர் ஹரி மேகன் தம்பதியின் எதிர்காலம் இவர் கையில்தான்: தீர்மானிக்கப்போகும் ட்ரம்ப்பின் முடிவு
பிரித்தானிய இளவரசர் ஹாரி, மேகன் தம்பதி அமெரிக்காவில் இருக்கப்போவது வெளியுறவுத்துறை செயலாளர் கையில்தான் உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.
விசா தொடர்பில் சிக்கல்
டொனால்ட் டிரம்ப் மீண்டும் அமெரிக்க ஜனாதிபதியாக தெரிவானதைத் தொடர்ந்து, இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதி விசா தொடர்பில் சிக்கலை எதிர்கொள்ளலாம் என்ற கருத்து நிலவுகிறது.
இதனால் அமெரிக்காவில் தம்பதியரின் எதிர்காலம் குறித்து கேள்வி எழுந்த நிலையில், தற்போது நபர் ஒருவரின் கையில்தான் அந்த முடிவு இருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.
அதாவது, ஹரி எந்த வகையான விசாவை பெறுவார் என்பதைப் பொறுத்தும், ட்ரம்ப் வெளியுறவுத்துறை செயலாளராக யாரை நியமிக்கிறாரோ அவரது கையிலும்தான் உள்ளது.
அந்த நபர் ரிக் கிரெனெல் ஆக இருக்கலாம் என்ற கூற்று நிலவுகிறது. இவர் ஜேர்மனிக்கான முன்னாள் அமெரிக்க தூதர் ஆவார்.
அதுமட்டுமின்றி முன்பு ட்ரம்ப் ஜனாதிபதியாக இருந்தபோது, இவர் தேசிய உளவுத்துறையின் செயல் இயக்குநராகவும் இருந்தார்.
ட்ரம்ப்பின் முடிவு
மேலும், இவர் மேகன் மார்க்கலை 2021யில் விமர்சித்திருந்தார். அப்போது 'வேலையை செய்ய விரும்பாத மேகன் இலவசங்கள் கிடைக்காததால் கோபமாக இருக்கிறார்' என குறிப்பிட்டார்.
அதேபோல் வெளியுறவு செயலாளருக்கான மற்றொரு போட்டியாளராக செனட்டர் மார்கோ ரூபியோ உள்ளார். ஆனால் இவர் ஹரி மீது தனது உணர்வுகளை பகிரங்கப்படுத்தவில்லை.
எனினும் இவர் பிரித்தானிய விவகாரங்களில் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார். கடந்த காலங்களில் இவர், மறைந்த ராணி மற்றும் சர் வின்ஸ்டன் சர்ச்சில் ஆகியோருக்கு முழுமையான பாராட்டுகளை வெளிப்படுத்தியவர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |