மரணத்தை நேரில் சந்தித்த இளவரசர் ஹரி... அந்த திகில் நிமிடங்கள்: வெளிவரும் புதிய தகவல்
ரினோ கன்சர்வேஷன் போட்ஸ்வானாவுடன் ஒரு சிறப்பு திட்டத்தில் அப்போது இளவரசர் ஹரி பங்கேற்றுள்ளார்.
ஒரு சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றும் வாய்ப்பு அமைந்தால், தமக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசாக இருக்கும்
போட்ஸ்வானா நாட்டில் காண்டாமிருகத்தால் தாக்கப்பட்டு இளவரசர் ஹரி 20 அடி இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் தற்போது புத்தகம் ஒன்றில் வெளியிடப்பட்டுள்ளது.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையின் ஏதேனும் ஒருகட்டத்தில் மரணத்தை நேரில் சந்திக்கும் சூழல் ஏற்படலாம். அவ்வாறான ஒரு தருணத்தை 2015ல் இளவரசர் ஹரி எதிர்கொண்டுள்ளதாக, அவர் தொடர்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டுள்ள ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
@WireImage
ரினோ கன்சர்வேஷன் போட்ஸ்வானாவுடன் ஒரு சிறப்பு திட்டத்தில் அப்போது இளவரசர் ஹரி பங்கேற்றுள்ளார். குறித்த திட்டமானது அழிந்து வரும் காண்டாமிருகங்களை மீட்டெடுக்க உதவுவதற்கும் அவற்றை கண்காணிக்க உரிய சாதனங்களுடன் பொருத்துவதற்கும் இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் ஒரு காண்டாமிருகம் திடீரென்று கட்டுப்பாட்டை இழந்துள்ளது. எதிர்பாராத வகையில், அந்த காண்டாமிருகத்திடம் இளவரசர் ஹரி சிக்கிக்கொண்டுள்ளார். ஆனால் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் ஹரி தப்பியதாகவே கூறப்படுகிறது.
@Tim Rooke/Shutterstock
திடீரென்று சினம் கொண்ட ஒரு காண்டாமிருகம், இளவரசர் ஹரியை குறிவைத்து தாக்கியதுடன், அவரை சில அடி தூரம் இழுத்தும் சென்றுள்ளது. ஹரி மட்டுமின்றி, அந்த காண்டாமிருகத்தை பிணைத்திருந்த கயிறுடன் மேலும் ஐந்து பேர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர்.
ஒருவழியாக சுதாரித்துக் கொண்ட குழு, இறுதியில் கயிறை கெட்டியாகப் பிடித்துக் கொண்டு, தடுத்து நிறுத்தியுள்ளனர். மேலும், ஒருமுறை காண்டாமிருகத்தால் ஒருவர் கயிறுடன் அரை மைல் தொலைவு இழுத்துச் செல்லப்பட்டதும், பின்னர் அவர் காப்பாற்றப்பட்டு அறுவைசிகிச்சை முன்னெடுக்கப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
@PA
அந்தவகையில் இளவரசர் ஹரி நூலிழையில் உயிர் தப்பினார் என்றே கூறப்படுகிறது. ஆப்பிரிக்க வனப்பகுதிகளை மிகவும் நேசிக்கும் இளவரசர் ஹரி, ஒரு சுற்றுலா வழிகாட்டியாக பணியாற்றும் வாய்ப்பு அமைந்தால், அது தமக்கு கிடைக்கும் மிகப்பெரிய பரிசாக இருக்கும் என ஹரி ஒருமுறை கூறியாதாக ராஜகுடும்பத்து ஆசிரியர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை படிப்பை முடித்த ஹரி, ஓராண்டு காலம் விடுப்பு எடுத்துக் கொண்டதாகவும் அதன் பின்னர் 2005ல் ராயல் ராணுவப் பயிற்சி மையத்தில் இணைந்ததாகவும், அதன் பின்னர் 2006 ஏப்ரல் மாதம் பயிற்சி முடித்து, பின்னர் ஈராக்கில் பிரித்தானிய ராணுவத்தினருடன் அனுப்பப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.