பிரித்தானிய ராஜகுடும்பத்தை சிலுவையில் ஏற்றும் 8 தகவல்கள்: அம்பலப்படுத்தும் இளவரசர் ஹரி
மேகன் மற்றும் தமது பிள்ளைகள் தொடர்பில் அரண்மனைக்குள் இனவாத கருத்துகள் வெளியானதன் பின்னணி
கமிலா ராணியாராக முடிசூடுவதில் தமக்கு உடன்பாடில்லை என வெளிப்படுத்தியுள்ள இளவரசர் ஹரி
பல மாதங்களாக வெளியிடத் தயாராகி வந்த இளவரசர் ஹரியின் நினைவுக் குறிப்புகள் நூல் எதிர்வரும் ஜனவரியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டதுடன், அந்த நூலின் தலைப்பும் தற்போது வெளியாகி அரண்மனை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
உதிரி என தலைப்பிடப்பட்டுள்ள இளவரசர் ஹரியின் நினைவுக் குறிப்புகள் நூல் எதிர்வரும் ஜனவரி 10ம் திகதி வெளியாக உள்ளது. குறித்த நூலில் அட்டைப்படமும் அதன் தலைப்பும் வெளியான நிலையில், பிரித்தானிய அரண்மனை வட்டாரங்கள் திகிலடையத் தொடங்கியுள்ளதாகவே கூறப்படுகிறது.
Image: Harpo Productions
Spare என தலைப்பிடப்பட்டுள்ள அந்த நூல் பிரித்தானிய ராஜகுடும்பம் மீதான இளவரசர் ஹரியின் மோதல் போக்கு என அரண்மனை வட்டாரத்தில் தற்போது கூறப்படுகிறது. குறித்த நூலில், இளவரசி டயானா வாகன விபத்தில் கொல்லப்பட்ட பின்னர், இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்ட இரு இளம் வயது இளவரசர்களின் மன நிலை என்னவாக இருந்தது என்பது தொடர்பில் வாசகர்கள் விரிவாக தெரிந்து கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மட்டுமின்றி, ராணியார் இரண்டாம் எலிசபெத் காலமான அன்றைய நாள் என்ன நடந்தது எனவும், ஏன் ராணியாரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது என்பது தொடர்பிலும், மேகன் மற்றும் தமது பிள்ளைகள் தொடர்பில் அரண்மனைக்குள் இனவாத கருத்துகள் வெளியானதன் பின்னணி தொடர்பில் இளவரசர் ஹரி விரிவாக குறித்த புத்தகத்தில் விவாதித்துள்ளதாக கூறப்படுகிறது.
@getty
அத்துடன், ராணியாரின் ஜூபிலி கொண்டாடங்களில் இருந்து ஏன் விரைவாக வெளியேற நேர்ந்தது எனவும், ராஜகுடும்பத்து உறுப்பினர்களுடன் விருந்து கொண்டாட்டங்களில் ஏன் கலந்துகொள்ளவில்லை என்பதன் பின்னனி தொடர்பிலும் ஹரி விளக்கமளித்துள்ளார் என கூறப்படுகிறது.
மேலும், ராஜகுடும்பத்து மூத்த உறுப்பினர்கள் அந்தஸ்தில் இருந்து வெளியேறுவதாக ஹரி- மேகன் தம்பதி அறிவித்ததன் உண்மையான பின்னணி, இந்த விவகாரம் தொடர்பில் Sandringham மாளிகையில் தற்போதைய மன்னர் சார்லஸ், தற்போதை வேல்ஸ் இளவரசர் வில்லியம் ஆகியோர் முன்னிலையில் நடந்த காரசாரமான விவாதங்கள் என முற்றிலும் ஒளிவு மறைவின்றி ஹரி வெளிப்படுத்தியுள்ளதாக கூறுகின்றனர்.
@getty
அத்துடன், ஹரி- மேகன் திருமணத்திற்கு முன்னர் கேட் மிடில்டன் மற்றும் மேகன் ஆகியோரின் மனக்கசப்புக்கு காரணம், இருவரும் கண்கலங்க காரணமான பின்னணி, சகோதரர்கள் இருவருக்குள் ஏற்பட்ட விரிசல், அதன் மூல காரணம் என்ன? அதன் பின்னணியில் உண்மையில் யார் என்பதும் இளவரசர் ஹரி வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், ராணியாக முடிசூடவிருக்கும் கமிலா உடனான உறவு, ஏற்கனவே கமிலா ராணியாராக முடிசூடுவதில் தமக்கு உடன்பாடில்லை என வெளிப்படுத்தியுள்ள ஹரி, தமது நினைவுக் குறிப்பில் கமிலா தொடர்பில் விரிவாக எழுதியிருப்பார் என்றே நம்பப்படுகிறது.
Image: Daily Mirror
இறுதியாக, மன உளைச்சல் காரணமாக தற்கொலை எண்ணத்தில் இருந்த மேகனை உரிய சிகிச்சைக்கு அனுமதி மறுத்தவர்கள் அல்லது கண்டுகொள்ளாதவர்கள் குறித்தும் இளவரசர் ஹரி வெளிப்படையாக கூறியிருப்பார் என்றே கூறுகின்றனர்.