மகாராணியாரின் செல்லப்பெயரை மகளுக்கு வைத்த இளவரசர் ஹரி: ராஜ குடும்ப எழுத்தாளர் விமர்சனம்
இளவரசர் ஹரி தன் மகளுக்கு தன் பாட்டியாரின் செல்லப்பெயரை வைத்துள்ளதை பலரும் அறிந்திருக்கக்கூடும். ஆனால், அந்த பெயரை ஹரி தன் மகளுக்கு வைத்தது அவமரியாதைக்குரிய செயல் என்கிறார் ராஜ குடும்ப எழுத்தாளர் ஒருவர்.
மகாராணியாரின் செல்லப்பெயர்
ஹரி தன் மகளுக்கு லிலிபெட் டயானா மௌண்ட்பேட்டன் விண்ட்ஸர் என பெயரிட்டுள்ளார்.
அதில் லிலிபெட் என்பது தன் பாட்டியாரான மகாராணி எலிசபெத்தின் செல்லப்பெயராகும்.
அதாவது, மகாராணியார் சிறுபிள்ளையாக இருக்கும்போது, அவரால் தன் பெயரை எலிசபெத் என உச்சரிக்க முடியவில்லையாம்.அவர் தன் பெயர் லிலிபெட் என்று கூறுவாராம்.
Image: Misan Harriman/Duke and Duchess of Sussex HANDOUT/EPA-EFE/REX/Shutterstock
அந்த பெயர் அவரது தந்தைக்குப் பிடித்துப்போக, அவர் தன் மகளை லிலிபெட் என்றே அழைத்தாராம். அவருக்குப் பின், அவரது காதல் கணவரான இளவரசர் பிலிப் தன் மனைவியை லிலிபெட் என அழைப்பாராம்.
வேறு யாரும் அந்த பெயரைப் பயன்படுத்துவதில்லை.
Image: Netflix
ஆனால், அந்த பெயரையே தன் மகளுக்கு வைத்துள்ளார் ஹரி.
இந்நிலையில், அது மகாராணியாரின் தனிப்பட்ட பெயர் என்று கருதும் பலரும், அந்த பெயர் மகாராணியாரை அவமதிக்கும் என்னும் கோணத்தில் பார்ப்பார்கள் என்பது ஹரிக்குத் தெரிந்திருக்கக்கூடும் என்று கூறியுள்ளார் ராஜ குடும்ப எழுத்தாளரான Tom Quinn!
Image: Print Collector/Getty Images
Image: Getty Images