மீண்டும் பிரித்தானியாவுக்கு திரும்ப ஹரிக்கு விருப்பமில்லையா? வெளியான தகவல்
இளவரசர் ஹரிக்கு அரச பணிகளைத் தொடர பிரித்தானியாவுக்கு திரும்புவதில் எந்த விருப்பமும் இல்லை என்று வட்டாரங்கள் கூறுகின்றன.
கலிபோர்னியாவில் குடியேற்றம்
அடுத்த வாரம் 40 வயதை எட்டப்போகும் இளவரசர் ஹரி, தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் கலிபோர்னியாவில் குடியேறியிருப்பதாக அவரது நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் அமெரிக்காவில் ஹரிக்கு அற்புதமான புதிய நண்பர்கள் இருப்பதுடன் பல திட்டங்களை அவர் அங்கு வைத்துள்ளாராம்.
தற்போது நியூயார்க்கில் ஒரு பயணத்திற்கு தயாராகி வரும் அவர், அங்கு ஹாலோ டிரஸ்ட் மற்றும் டயானா விருது உட்பட அவரது பல்வேறு தொண்டு நிறுவனங்களுடன் தொடர்புடைய ஈடுபாடுகளில் பங்கேற்பார் என்று கூறப்படுகிறது.
நிரந்தர வருவாயைத் தேடவில்லை
இந்நிலையில், ஹரி அமெரிக்காவுக்கு சென்று 3 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில், அவர் மீண்டும் அரச பணிகளை தொடர பிரித்தானியாவுக்கு திரும்புவதற்கு விரும்பவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளாக கலிபோர்னியாவில் குடும்பத்துடன் இருக்கும் ஹரியும், மேகனும் நிரந்தர வருவாயைத் தேடவில்லை என்று ஆதாரங்கள் கூறுகின்றன.
ஆனாலும், இளவரசர் அனைத்து வகையான ஹாலிவுட் விளம்பரதாரர்களிடம் இருந்தும் விலகி, தனது பழைய நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளிடம் ஆலோசனை பெறுகிறார் என்று ஒரு வட்டாரம் தெரிவிக்கிறது.
ஹரி "நான் வேறு ஏதவாது செய்ய வேண்டும். ஏனென்றால் நான் செய்வது தெளிவாக வேலை செய்யவில்லை" என்று நினைக்கிறார். சுருக்கமாக அவர் செயல்படும் விதத்தை மறுபரிசீலனை செய்கிறார்.
அவர் அணுகும் ஆலோசகர்களில் குறைந்தபட்சம் ஒருவராவது விஸ்வாசமான, விவேகமான பழைய பாடசாலையிருந்து வந்த நம்பகமான நபராக இருப்பதாக தெரிகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |