இளவரசர் ஹரியை ஓரம் கட்டும் மேகன்: மனைவியாலும் புறக்கணிக்கப்படுவதாக வேதனை
திருமணம் செய்தால் ஒரு இளவரசரை திருமணம் செய்யவேண்டும் என நீண்ட காலமாக மேகன் ஆசைப்பட்டதாக ஒரு தகவல் உண்டு.
அத்துடன், இளவரசர் ஹரி குறித்து இணையத்தில் மேகன் தேடியதாகவும், தோழி ஒருவர் துணையுடன் இருவரும் சந்தித்துக்கொண்டதாகவும், பின் காதலிக்கத் துவங்கியதாகவும் செய்திகள் வெளியாகின.
Credit: Splash
ஆனால், எல்லாமே சுயநலனுக்காக, தனது புகழுக்காகத்தானோ என நினைக்கும் வகையில் நடந்துகொள்கிறார் மேகன்!
இளவரசர் ஹரியை ஓரம் கட்டும் மேகன்
ஆம், சமீப காலமாக வெளிவரும் தகவல்கள் எல்லாமே, ஹரியை மேகன் ஓரங்கட்டுவதாகவே தெரிவிக்கின்றன.
Credit: Getty
ராஜ குடும்ப பொறுப்புகளைத் துறந்து, பிரித்தானியாவிலிருந்தே வெளியேறிய பின்பும், சசெக்ஸ் கோமகள் என்னும் பட்டத்தை மட்டும் விட மேகனுக்கு மனமில்லை.
ஆக, ராஜ குடும்ப பட்டத்தை தன் பெயருடன் ஒட்டவைத்துக்கொண்டு புகழ் தேடும் மேகன், அந்த புகழ் தனக்குக் கிடைக்க காரணமாக இருந்த இளவரசர் ஹரியை ஓரங்கட்டிவருவதைக் காட்டும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகிவருகின்றன.
Credit: AP
ஹரி பேசிக்கொண்டிருக்கும்போது இடைமறித்து பேசுவது, ஹரியை பின்னுக்கு நிறுத்திவிட்டு, தான் ஒலிபெருக்கியைப் பிடித்துக்கொண்டு பேசுவது என ஹரியை புறக்கணித்துவருகிறார் மேகன்.
அதனால், இப்போது, தான் தன் மனைவியாலும் ‘ஸ்பேர்’ ஆக நடத்தப்படுவதுபோல் உணர்வதாக தன் நண்பர்களிடம் புலம்பியிருக்கிறார் ஹரி.
Credit: Splash
அதைவிட முக்கிய விடயம், மீண்டும் பிரித்தானியாவுக்கே, சொல்லப்போனால், ராஜ குடும்பத்துக்கே திரும்புவது குறித்தும் அவர் திட்டமிட்டுவருவதாகவும் தகவல்கள் வெளியாகிவருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |