வலி மிகுந்த அந்த 19 நிமிடங்கள்... ஜூபிலி விழாவில் இளவரசர் ஹரியின் அவஸ்தை

Queen Elizabeth II Prince Harry Prince William
By Arbin Jun 06, 2022 03:53 PM GMT
Report

பிரித்தானிய ராணியாரின் ஜூபிலி விழாவின் போது சகோதரர்களான இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி வெளிப்படையாக ஒன்று சேர்வார்கள் என நம்பியிருந்த ஆதரவாளர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பிரித்தானிய ராணியார் இரண்டாம் எலிசபெத்தின் ஜூபிலி விழாவின் ஒருபகுதியாக நன்றி கூறும் ஆராதனை ஒன்று புனித சின்னப்பர் பேராலயத்தில் ஜூன் 3ம் திகதி முன்னெடுக்கப்பட்டது.

குறித்த ஆராதனையின் போது இளவரசர்கள் இருவரும் தங்களுக்கிடையேயான மனக்கசப்பை மறந்து அருகருகே அமர்வார்கள் என ஆதரவாளர்கள் கருதினர். அப்படியான ஒரு தருணம் இதுவென கருதி காத்திருந்தனர்.

வலி மிகுந்த அந்த 19 நிமிடங்கள்... ஜூபிலி விழாவில் இளவரசர் ஹரியின் அவஸ்தை | Prince Harry Painful Jubilee Thanksgiving

ஆனால் வில்லியம் தம்பதி முன்வரிசையில் இளவரசர் சார்லஸ் தம்பதியுடன் வீற்றிருக்க, இன்னொரு பக்கம், இரண்டாவது வரிசையில், உறவினர்களான இளவரசி யூஜின் மற்றும் அவரது சகோதரி குடும்பத்தினருக்கு பின்னால் இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதிக்கு இருக்கை ஒதுக்கப்பட்டிருந்தது.

இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தமபதி தங்கள் இருக்கைக்கு வரும் முன்னர், வலி மிகுந்த சுமார் 19 நிமிடங்களை இளவரசர் ஹரி எதிர்கொண்டதாக அரச குடும்பத்து நிபுணர் ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, அரச குடும்பத்தினருக்கு இருக்கைகள் ஒதுக்கப்பட்ட பாணியிலேயே புரிந்து கொள்ளலாம், நிகழ்ச்சியின் முக்கியஸ்தர்கள் இளவரசர் சார்லஸ் தம்பதி மற்றும் இளவரசர் வில்லியம் தம்பதி தான் எனவும், இளவரசர் ஹரிக்கு அரண்மனை அவ்வளவாக முக்கியத்துவம் அளிக்க தயாராக இல்லை என்பதையும் புரிந்து கொள்ளலாம் என்றார்.

வலி மிகுந்த அந்த 19 நிமிடங்கள்... ஜூபிலி விழாவில் இளவரசர் ஹரியின் அவஸ்தை | Prince Harry Painful Jubilee Thanksgiving

மட்டுமின்றி, பணியில் இல்லாத அரச குடும்பத்து உறுப்பினர்களுக்கு முக்கியத்துவம் இருக்காது எனவும், அவர்கள் எப்போதும் இரண்டாம் நிலை உறுப்பினர்களாகவே பாவிக்கப்படுவார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், பொதுவாக வில்லியம்- ஹரி சகோதரர்கள் பொது நிகழ்ச்சிகளுக்கு ஒன்றாகவே சென்று வந்துள்ளனர். ஆனால் தற்போதைய சூழலில், வில்லியம் தம்பதிக்கு ஒதுக்கப்பட்ட நேரம் வேறு எனவும் அதற்கும் 19 நிமிடங்கள் முன்பு ஹரிக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதில் இருந்தே இளவரசர் ஹரி பல பாடங்களை கற்றுக்கொள்ளலாம் எனவும், மட்டுமின்றி, சகோதரர்கள் இருவரும் ஒன்றாக பொதுவெளியில் தோன்றவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US