இளவரசர் ஹரியை வாழ்த்தி அரச குடும்பம் வெளியிட்ட புகைப்படத்தில் மேகனை வெட்டி வீழ்த்தியது அம்பலம்
இளவரசர் ஹரியின் பிறந்தநாளுக்கு மன்னர் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோர் வாழ்த்தி வெளியிட்ட புகைப்படத்தில் மேகன் மெர்க்கல் வெட்டி நீக்கப்பட்டுள்ளது தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஹரிக்கு இன்ப அதிர்ச்சி
அமெரிக்காவின் கலிபோர்னியாவில் குடும்பத்துடன் வசித்துவரும் இளவரசர் ஹரிக்கு இன்ப அதிர்ச்சியை அளிக்கும் வகையில் இளவரசர் வில்லியம் மற்றும் மன்னர் சார்லஸ் ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இளவரசர் ஹரி மலர்ந்த முகத்துடன் காணப்படும் புகைப்படம் ஒன்றையும் இருவரும் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் பதிவு செய்து, 40வது பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நெகிழ்ச்சி சம்பவம், வில்லியம் மற்றும் ஹரிக்கு இடையே இருக்கும் பகைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதன் முதற்படியாக பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது வெளிவரும் தகவல்கள், அரச குடும்பத்தின் உண்மையான நோக்கத்தை வெளிப்படுத்துவதாக கூறுகின்றனர்.
பொதுவாக வேல்ஸ் இளவரசர் வில்லியம் வெளியிடும் சமூக ஊடக பதிவில் W & C என குறிப்பிடுவது வழக்கம். அதாவது வில்லியம் மற்றும் கேட் என்பதன் சுருக்கமாக அவர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
ஆனால் இளவரசர் ஹரியின் பிறந்தநாள் வாழ்த்தில் W & C குறிப்பிடப்படவில்லை. மேலும், மன்னர் சார்லஸ் மற்றும் வில்லியம் வெளியிட்டுள்ள புகைப்படமானது 2018ல் பதிவு செய்யப்பட்டதாகும். அப்போது இளவரசர் ஹரி அரச குடும்பத்தில் இருந்து வெளியேறவில்லை.
அரச குடும்பம் தயாராக உள்ளது
மேலும், டப்ளின் நகரில் நடந்த ஒரு விழாவில் ஹரியுடன் அவரது மனைவி மேகன் மெர்க்கலும் கலந்துகொண்டிருந்தார். திருமணம் முடித்து ஹரி - மேகன் தம்பதி மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் அது.
குறித்த புகைப்படத்தில் ஹரிக்கு அருகே மேகன் மெர்க்கலும் அமர்ந்திருந்தார். ஆனால் தற்போது வேல்ஸ் இளவரசர் வில்லியம் மற்றும் மன்னர் சார்லஸ் தங்கள் சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மேகன் மெர்க்கல் வெட்டி வீசப்பட்டுள்ளார்.
இதனால், ஹரியை மட்டும் ஏற்றுக்கொள்ள அரச குடும்பம் தயாராக உள்ளது என சூசகமாக தெரிவிப்பதாக சிலர் கூறுகின்றனர். ஏற்கனவே இளவரசர் ஹரி பிரித்தானியா திரும்பும் நடவடிக்கைகளை கொஞ்சம் கொஞ்சமாக முன்னெடுத்து வருவதாகவே கூறப்படுகிறது.
தனது முன்னாள் உதவியாளர்களிடம் இது தொடர்பில் ஹரி விவாதித்தும் வருகிறார். ஆனால் ஹரி - மேகன் தம்பதி நிரந்தரமாக கலிபோனியாவில் இருந்து பிரித்தானியா திரும்பும் வாய்ப்பு இல்லை என்றே அவர்களுக்கு நெருக்கமான வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |