பிரித்தானியா திரும்ப திட்டமிடும் இளவரசர் ஹரி: வெளுத்து வாங்கும் ராஜ குடும்ப எழுத்தாளர்
மறைந்த பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளுக்காக பிரித்தானியா திரும்ப திட்டமிட்டு வருகிறார் இளவரசர் ஹரி.
வெளுத்துவாங்கும் ராஜ குடும்ப எழுத்தாளர்
பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8ஆம் திகதி இயற்கை எய்தினார். அவரது முதலாம் ஆண்டு நினைவு நாளை அனுசரிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது அரண்மனை வட்டாரம்.
இந்நிலையில், மகாராணியாரின் நினைவு நாளுக்கு முந்தைய தினம், தொண்டு நிறுவனம் ஒன்றில் விருதுகள் வழங்கும் விழா ஒன்றில் பங்கேற்பதற்காக இளவரசர் ஹரி பிரித்தானியா வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
The Irish Sun
இந்த தகவல் வெளியானதும், இளவரசர் ஹரியின் உதவி இங்கு யாருக்கும் தேவையில்லை என சாடியுள்ளார் ராஜ குடும்ப எழுத்தாளரான Angela Levin.
ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அவர், ஹரியும் மேகனும் மீண்டும் பிரித்தானியாவுக்கே திரும்புவதற்காகவே இதையெல்லாம் செய்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். அவர்கள் மாளிகைகளில் ஒன்றில் ஒரு அறையை வாடகைக்கு எடுத்து தங்கி, தாங்கள் உதவலாம் என நினைக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய உதவி யாருக்கும் தேவையில்லை என்று கூறியுள்ளார் Angela.
OK Magazine
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |