முடியாட்சிக்கு சிக்கலாக இருக்கும் இளவரசர் ஹரி., சார்லஸ் விடுத்துள்ள எச்சரிக்கை!
மன்னர் மூன்றாம் சார்லஸின் முடியாட்சிக்கு அவரது இளைய மகன் பெரும் இடையூறாக இருப்பார் என்று கூறப்படுகிறது.
இளவரசர் ஹரிக்கு மன்னர் உறுதியான எச்சரிக்கையை விடுத்துள்ளார்- அரசு குடும்பத்திற்கு நெருக்கமான நபர்.
மன்னன் சார்லஸின் முடியாட்சிக்கு இளவரசர் ஹரி பாரிய பிரச்சனையாக இருப்பார் என்று பிரித்தானிய அரச நிபுணர் கூறியுள்ளார்.
மன்னர் மூன்றாம் சார்லஸின் ஆட்சி தொடர்ச்சியான பல சிக்கல்களுக்கு மத்தியில் தொடங்கியது, இருப்பினும் அவற்றையெல்லாம் விட புதிய மன்னரின் ஆட்சிக்கு அவரது மகன் இளவரசர் ஹரி தான் ஒரு பெரிய அச்சுறுத்தலாக இருப்பார் என்று நிபுணர் ஒருவர் டினா பிரவுன் கூறினார்.
ராணியின் மரணத்திற்குப் பிறகு பதிவுசெய்யப்பட்ட ஒரு நேர்காணலில், அரச எழுத்தாளர் டினா பிரவுன் (Tina Brown) கூறுகையில், "ஹரி என்றைக்கும் ஒரு பிரச்சனையாகவே இருப்பார் என்று நான் நினைக்கிறேன், ஏனென்றால் அவர் அடுத்து என்ன செய்யப் போகிறார் என்பது யாருக்கும் தெரியாது. வெடிகுண்டுகள் எங்கிருந்து வரும் என்று யோசித்து அனைவரையும் பரபரப்பாகவே வைத்திருக்கிறார்" என்று அவர் கூறினார்.
இதற்கிடையில், அரச குடும்பத்திற்கு நெருக்கமான நபர், "மன்னர் சார்லஸ் இளவரசர் ஹரிக்கு ஒரு உறுதியான எச்சரிக்கையை விடுத்துள்ளார், அவர் புத்தகத்தில் அவரைப் பற்றிய ரகசிய தகவல்களை வெளியிட்டால், ஹரியின் முழு குடும்பத்தின் பட்டங்களும் பறிக்கப்படும்" என்று கூறியுள்ளார்.
Samir Hussein/WireImage