இளவரசர் ஹரி நிரந்தரமாக ராஜ குடும்பத்துக்கு திரும்புவார்: மனைவி மேகன் இல்லாமல்
பிரித்தானிய இளவரசர் ஹரி நிரந்தரமாக ராஜ குடும்பத்துக்குத் திரும்புவார் என ராஜ குடும்ப நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இளவரசர் ஹரி நிரந்தரமாக பிரித்தானியா திரும்புவார்
Credit: MEGA
பிரித்தானிய இளவரசர் ஹரி 10 ஆண்டுகளில் நிரந்தரமாக பிரித்தானியாவிலிருக்கும் ராஜ குடும்பத்துக்கு திரும்புவார், ஆனால், அவர் தன் மனைவி மேகன் இல்லாமல், தனியாகத் திரும்புவார் என்று கூறியுள்ளார் ராஜ குடும்ப நிபுணரான Hugo Vickers.
நெட்ப்ளிக்ஸில் வெளியாகிவரும் தொடர் ஒன்றில், மேகன் சமைப்பது, தோட்டம் அமைப்பது மற்றும் நண்பர்களுடன் நேரம் செலவிடுவது ஆகிய விடயங்களில் மகிழ்ச்சியாக இருப்பதாக காட்டப்படுகிறது.
அத்துடன், ஹரி, மேகன் தம்பதியர் விருதுவழங்கும் விழாக்களில் பங்கேற்று வருகிறார்கள்.
ஆனால், இளவரசர் ஹரி விரும்பியது இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையை அல்ல என நான் கருதுகிறேன் என்று கூறும் Hugo,காலம் வரும்போது, ஹரி ராஜ குடும்பத்துக்கே திரும்பிவிடக்கூடும் என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |